ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க அதனுடைய யூசர் எக்ஸ்பீரியன்ஸ் தான் காரணம். ஆம், ஒவ்வொரு முறையும் கூகுள் நிறுவனம் நம்மிடம் ஆச்சரியமூட்டும் அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவது மிகவும் எளிதாக அமைகிறது. இதுவே எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் கூகுள் தற்போது ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அப்டேட் ப்ளூடூத் சேவையை பொருத்ததாகும். அதனால் இந்த அப்டேட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஒவ்வொரு அம்சங்களிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே இருக்கும். அதேபோல் இந்த அப்டேட் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு குறித்து சர்ச்சைகளையும் கிளப்பி இருக்கிறது. ஆம், முதலில் நாம் ப்ளூடூத் சேவை பற்றி விரிவாக பார்க்கலாம். அனைத்து விதமான ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த ப்ளூடூத் சேவை இருக்கிறது. இந்த ப்ளூடூத் சேவை மூலம் நாம் அருகில் இருக்கும் இன்னொரு ஃபோனோ அல்லது எலக்ட்ரானிக் கருவிகளையோ இணைத்துக் கொள்ளலாம். ப்ளூடூத் மூலம் இணைந்த கருவிகளுக்குள் தரவு பரிமாற்றங்களை செய்ய முடியும். இது ஒரு வயர்லெஸ் சேவையாகும். எனவே இதை மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
தற்போது இந்த ப்ளூடூத் குறித்த புதிய அப்டேட் என்னவென்று பார்க்கலாம். உங்களுடைய மொபைல் போனில் ப்ளூடூத் சேவையை முழுமையாக ஆப் அல்லது டிசேபிள் செய்ய முடியாது. இன்னும் விரிவாக சொல்லப்போனால், ப்ளூடூத் சேவை ஆப் செய்வதுபோல் உங்களுக்கு காட்டினாலும், பேக்ரவுண்டில் அது வேலை செய்து கொண்டே இருக்கும். குறைந்த சிக்னல் மூலம் அது தன்னுடைய கணக்டிவிட்டியை மெயின்டைன் செய்யும். எதற்காக இப்படி ஒரு அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான வீடுகளில் ஸ்மார்ட் ஹோம் கனெக்டிவிட்டி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது வீடுகளில் உள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக் கருவிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செயல்படுகிறது. இதற்கு அத்தியாவசியமாக ப்ளூடூத் கனெக்டிவிட்டி தேவைப்படுகிறது. ஏனென்றால் ப்ளூடூத் மூலமே நீங்கள் இந்த ஸ்மார்ட் கருவிகளை பயன்படுத்த முடியும் அல்லது அதை இயக்க முடியும்.
இதுபோன்ற சமயங்களில் உங்களுடைய மொபைல் ஃபோனில் அதாவது ஆண்ட்ராய்டு போனில் நீங்கள் எப்பொழுதும் ப்ளூடூத்தை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ஆன் செய்து வைத்திருக்கும் நேரங்களில் உங்களுடைய பேட்டரி மொபைல் போன் பேட்டரி நீண்ட நேரம் தாங்காது.தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த வசதி உங்களுடைய மொபைல் போனில் ப்ளூடூத் ஆப் செய்த பிறகும் இந்த கனெக்டிவிட்டி மூலம் ஸ்மார்ட் அப்ளைன்ஸை இயக்க முடியும். இதனால் உங்களுடைய மொபைல் போன் சார்ஜ் வெகு சீக்கிரமாக குறையாது. இது மட்டுமின்றி பைண்ட் மை டிவைஸ் என்னும் ஆப்பையும் நீங்கள் இதன் மூலம் இன்னும் கூடுதல் வசதியாக பயன்படுத்தலாம். எப்படி என்றால்? பைண்ட் மை டிவைஸ் ஆப் காணாமல் போன டிவைஸ்களை கண்டுபிடித்து தர உதவும் ஆப் ஆகும். ஒருமுறை நீங்கள் ப்ளூடூத்தில் கனெக்ட் செய்யப்பட்டு விட்டால் திரும்பவும் அந்த டிவைஸ் அருகில் நீங்கள் சென்றால் தானாக ப்ளூடூத் ஆக்டிவேட் ஆகி குறிப்பிட்ட டிவைஸை கண்டுபிடிக்க முடியும். இதுவும், ப்ளூடூத் முற்றிலும் ஆப் ஆகாமல் இருப்பதால் இந்த வேலையை சுலபமாக செய்ய முடியும்.
இந்த அப்டேட் மூலம் ஷேரிங் மிகவும் எளிதானது, ஆம் உங்களுடைய டிஜிட்டல் keys, ரிமோட் போன்ற டிவைஸ்களை எளிதாக அடையாளம் காண முடியும். அது மட்டுமின்றி இது ஹெட்போன்ஸ் சப்போர்ட்டும் சாத்தியமாக்கி இருக்கிறது. கூடிய விரைவில் JBL, sony, இன்னும் பல நிறுவனங்கள் இந்த அப்டேட்டில் இணைந்து வேலை செய்ய இருக்கிறது. இதனால் உங்களுடைய போன் எப்பொழுதும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியில் இருக்கும்.இந்த ப்ளூடூத் அப்டேட் எப்படி வேலை செய்யும் என்பதை பார்க்கலாம். எப்பொழுதும் போல ப்ளூடூத்தை நீங்கள் ஆன் செய்து உபயோகப்படுத்தலாம். உங்களுடைய வேலைகள் முடிந்த பிறகு நீங்கள் அதை ஆப் செய்யவும் முடியும் ஆனால் நீங்கள் ப்ளூடூத்தை ஆப் செய்த பின்னர் அது முழுமையாக ஆப் ஆகாது. மாறாக அது பேக்ரவுண்டில் மிகக் குறைந்த சிக்னலில் வேலை செய்து கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கு உங்களுடைய ப்ளூடூத் ஆப் செய்ததாகவே காட்டப்படும். இதன் மூலம் உங்களுக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியாது இருப்பினும் உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய போன் ப்ளூடூத்தில் கனெக்ட் ஆகி இருக்கும். இப்படி நம்மை அறியாமல் நம்முடைய போனின் ப்ளூடூத் கனெக்ட் ஆகி இருந்தால் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தலாக இருக்கலாம். அதாவது நம்முடைய மொபைல் போன் நம்மை அறியாமல் இன்னொருவருடன் அதாவது ஏற்கனவே ப்ளூடூத் கனெக்ட் செய்தவருடன் தற்போது கனெக்ட் ஆகி இருக்கும். இதனால் நம்முடைய தரவுகள் திருடப்படலாம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இந்த அப்டேட் உடன் புதிய டூளை இணைக்க இருக்கிறது, அது லுக் அப் டூள். இந்த லுக் அப் டூள் மூலம் உங்களுடைய மொபைல் ஃபோனில் இருந்து யார் யாருடைய மொபைல் போன் ப்ளூடூத் வழியாக அல்லது வேறு வழியாக கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். பார்ப்பது மட்டுமல்லாமல் தேவையில்லாதவர்களை நீக்கவும் செய்யலாம். இதன் மூலம் அனாவசியமாக உங்களுடைய மொபைல் போனில் இருந்து வேறு ஒருவருடைய மொபைல் போன் கனெக்ட் ஆவதை தடுக்க முடியும். கிட்டத்தட்ட இது ட்ரூ காலர் ஆப் வேலை செய்வது போல இது ப்ளூடூத் கனெக்டிவிட்டிக்காக வேலை செய்யும். எனினும் இந்த லுக் அப் டூள் முழுமையாக சந்தைக்கு எப்போது வரும் என்பது தெரியவில்லை. ஒருவேளை இது வந்தால் இந்த ப்ளூடூத் குறித்த பாதுகாப்பு சர்ச்சைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும்.
இந்த ஆண்டு மே மாதம் வரும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டில் இந்த ப்ளூ டூத் வசதி இடம் பெறும் என google நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஜூன் மாதத்திலும் சில அப்டேட்கள் வர இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறது. எனவே இந்த ப்ளூடூத் வசதியை முழுமையாக பயன்படுத்திய பிறகு இது வரமா அல்லது ஆபத்தா என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியும்.