ஸ்பானிஷ் நீச்சல் வீரர் ஓனா கார்பனெல் தனது தாய்ப்பால் பருகிவரும் மகனை தன்னுடன் ஒலிம்பிக்கிற்கு அழைத்து வர இயலாத சூழலில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஏனெனில் அவரது குடும்பம் ஜப்பானில் அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும் என்பதால் தன்னால் அவர்களை அழைத்துவர முடியவில்லை என கூறினார்.
அவரது மகன் Kai, கிட்டத்தட்ட ஒரு வயதுடையவர், தனது மகனையும் கனவரையும் ஜப்பான் அழைத்து வந்தால் அவர்கள் ஒரு தனி ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் தங்க வேண்டிய சூழல் இருக்கும். மேலும் அவர்கள் ஜப்பானில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தங்கள் அறையை விட்டு வெளியேற முடியாது எனவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“பகலில் Kai தேவைப்படும்போது தாய்ப்பால் கொடுக்க நான் ஒலிம்பிக் வில்லா, Team Bubble விட்டு வெளியேறி ஹோட்டலுக்குச் சென்று வர வேண்டியிருக்கும். இதற்காக தனது அணியின் ஆரோக்கியத்தை பணயம் வைக்கும் சூழல் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
“நான் மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் ஜப்பான் அரசின் கட்டுப்பாடு திணிப்புகள் எனது தடகள செயல்திறனுடன் பொருந்தாது” என்று கார்பனெல் கூறினார்.
“மற்ற விளையாட்டு வீரர்கள் இந்த நிலைமைக்கு பழகலாம், இன்னும் தங்கள் குழந்தைகளை அவர்களுடன் அழைத்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளது என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் என்னால் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சரியாக இருக்க மாட்டேன், Kai இன்னும் 20 நாட்களுக்கு Breast Pump-ஐ பயன்படுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுக்க விரும்புகிறேன், அது எனக்கு மிகவும் முக்கியமானது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.