டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலம் வென்றார்.
டோக்கியோவில் நடைப்பெற்றும் வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகளின் சாதனை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கடுமையான உழைப்பால் இந்திய வீராங்கனைகள் வெற்றி பதக்கத்தை அள்ள போராடி வருகின்றனர். ஏற்கனவே,பி.வி சிந்து பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் பதக்கம் வாங்கியிருந்த நிலையில் தற்போது லவ்லினா வெண்கலம் வென்றுள்ளார்.
69 கி.கி. எடைபிரிவில் அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றுள்ளார். முந்தைய சுற்று போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைப்பெற்ற அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது. ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.