TamilSaaga

சிங்கப்பூர் போலீசின் அதிரடி சோதனை – 8 மசாஜ் நிறுவனங்களிடம் தீவிர விசாரணை

சிங்கப்பூரில் தீவு முழுவதும் போலீசார் சுமார் 77 மசாஜ் நிறுவனங்கள் மற்றும் 59 பொது பொழுதுபோக்கு நிலையங்களில் அமலாக்க நடவடிக்கைகளை நடத்தினர். சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான இந்த அமலாக்க நடவடிக்கைகள் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்தன.

மசாஜ் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் பல்வேறு உரிம மீறல்களைச் செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து எட்டு மசாஜ் நிறுவனங்களின் ஆபரேட்டர்கள் மீது விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன. SPF ஜூலை 29ம் தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், ஜூலை 24ம் தேதி அன்று உபி சாலை 1ல் அமைந்துள்ள ஒரு பிரிவில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் பெருந்தொற்று (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகள் 2020 ஐ மீறியதற்காக வளாகத்தில் காணப்பட்ட 13 நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பொது பொழுதுபோக்கு சட்டம் மற்றும் மதுபானக் கட்டுப்பாடு (வழங்கல் மற்றும் நுகர்வு) சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக 25 வயது இளைஞர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

மசாஜ் நிறுவன சட்டத்தின் கீழ், உரிமம் இல்லாமல் மசாஜ் செய்வதற்கான ஒரு நிறுவனத்தில் மசாஜ் சேவைகளை வழங்கும் வணிகத்தை மேற்கொண்டவர்களுக்கு 10,000 வெள்ளி அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts