TamilSaaga

“சிங்கப்பூரில் கடந்த மூன்று வாரத்தில் இது மூன்றாவது முறை” : உயர்ந்தது எரிபொருள் விலை – முழு விவரம்

சிங்கப்பூரில் எரிபொருள் விலை விலை மீண்டும் உயர்ந்துள்ளது, கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட மூன்றாவது அதிகரிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 25) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்துள்ளது சிங்கப்பூரின் Esso நிறுவனம். சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தின் முன்முயற்சியான பம்ப் விலை கண்காணிப்பாளரான ஃப்யூயல் காக்கியின் கூற்றுப்படி, கடந்த வியாழன் அன்று SPC, Shell மற்றும் Caltex, அதேபோல கடந்த செவ்வாய்கிழமை Sinopec ஆகிய நிறுவனங்களின் விலை ஏற்றத்தை குறிப்பிட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு நான்கு முதல் ஐந்து காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய மாற்றத்தில், SPC நிறுவனத்தின் விலை குறைந்த அளவில் உள்ளது. அதன் 92-ஆக்டேன் பெட்ரோல் முன்பு இருந்ததை விட நான்கு சென்ட் அதிகரித்து ஒரு லிட்டர் 2.55 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதன் 95-ஆக்டேன் 5 சென்ட்டுகள் அதிகரித்துள்ளது மேலும் அதன் 98 ஆக்டேன் 4 சென்ட் அதிகரித்து 3.06 வெள்ளியாக உள்ளது. SPCன் டீசல் விலை 2.13 வெள்ளிக்கு அதாவது அதன் முந்தைய விலையில் இருந்து ஐந்து சென்ட்கள் அதிகரித்துள்ளது.

Shell அதன் 95-ஆக்டேன் விலையை 2.65 வெள்ளியாகவும், அதன் 98 ஆக்டேன் விலையை 3.12 வெள்ளியாகவும், ஸ்பெஷல் கிரேட் 98 என அழைக்கப்படும் ஆக்டேனை 3.34 வெள்ளிக்கும் விற்பனை செய்துவருகிறது. RBOB பெட்ரோலின் விலை ஒரு கேலன் US$2.52 ஆக உயர்ந்துள்ளது, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 6.3 சதவீதம் அதிகம்.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 86 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆகின்றது. இது 2.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதே போல துபாய் கச்சா எண்ணெய் 2 சதவீதம் அதிகரித்து 81.60 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

Related posts