TamilSaaga

“சிங்கப்பூரில் உலக மனநல தினம்” : இன்று முதல் நீல நிறத்தில் ஒளிரும் முக்கிய இடங்கள் – பிரதர் அறிவிப்பு

சிங்கப்பூரில் இன்று அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வை ஊக்குவிக்க 20க்கும் மேற்பட்ட சிங்கப்பூரின் அடையாளங்கள் நீல நிறத்தில் ஒளிரும் என்று முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் புகழ்பெற்ற மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை ஆஃப் பே மற்றும் செயின்ட் ஆண்ட்ரூ கதீட்ரல் ஆகியவை இன்று அக்டோபர் 10 முதல் 31 வரை நீல நிறத்தில் ஒளிரும்.

டான் டாக் செங் மருத்துவமனை மற்றும் மனநல நிறுவனம் (IMH) மற்றும் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களும் நீல நிறத்தில் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 1 வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு கூட்டு வெளியீட்டில், ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் IMH நிறுவனம் கூறியதாவது “கூட்டாக நீல நிறத்தில் ஒளிரச் செய்வதன் மூலம், மனநலப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காட்டி, அந்த பிரச்சனைகள் கொண்டவர்களை பேணிக்காக்க உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும் இதுகுறித்து தற்போது பேசியுள்ள பிரதமர் லீ “இன்றைய உலக மனநல தினத்தின் கருப்பொருள், நமது நல்வாழ்வுக்காக ஒரு சிறிய இடைவெளி எடுக்க நினைவூட்டுகிறது. உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், மனநல விழிப்புணர்வு சிங்கப்பூர் இந்த மாதம் தொடர் பேச்சு, பயிற்சி பட்டறை மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளது. நீங்கள் அவர்களின் FB பக்கத்தில் அதுகுறித்து மேலும் அறியலாம்.” என்று கூறினார்

இன்றிரவு தொடங்கி அக்டோபர் இறுதி வரை, சிங்கப்பூரின் 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் அடையாளங்கள் மனநல நிறுவனம் சிங்கப்பூர், கார்டன்ஸ் பை ஆஃப் பே, மற்றும் செயின்ட் ஆண்ட்ரூ கதீட்ரல், சிங்கப்பூர் ஆகியவை சில நாட்களுக்கு நீல நிறத்தில் ஒளிரும்.

Related posts