TamilSaaga

அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பையும் S-Pass கொடுத்துடாதீங்க… Fresherகளை எடுக்கவும் சிங்கப்பூர் கம்பெனிகள் போடும் முட்டுக்கட்டை… ஊழியர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கு ஏஜென்சிகள்

சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட கோட்டாக்களால் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து தடைபட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு Skilled டெஸ்ட் அடித்து வருபவர்கள் குறைந்து விட்டனர். அதே வேளையில் S-Pass மற்றும் E-Pass கோட்டாக்களும் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலைக்காக பல விதமான பாஸ்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் Shipyard permit துவங்கி E-Pass என இந்த லிஸ்ட் நீண்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வருடத்தில் எப்போதும் இல்லாமல் ஒரு சக்கரவு தொடர்ச்சியாக உருவாகி அது வளர்ந்து கொண்டே இருக்கிறது.

முதலில் சிங்கப்பூர் வேலைக்காக வர Test அடித்தவர்கள் சிலர் தனிப்பட்ட காரணங்களாலோ என்னவோ வராமல் இருந்து விட்டனர். இதனால் சிங்கப்பூர் தரப்பில் வெளியிடப்பட்ட கோட்டாக்கள் நிரம்பி விட்டதாக கூறப்படும். ஆனால் ரிலீஸ் செய்யப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்ட ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வரவில்லை. இதனால் அவர்கள் வந்தபிறகு மீண்டும் கோட்டாவை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருப்பதெல்லாம் பலரும் அறிந்த சேதி தான். இந்த பிரச்னையால் டெஸ்ட் முடித்தவர்களின் ரிசல்ட் கூட நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அக்டோபர் மாத ரிசல்ட்டே இன்னும் 2 வாரம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த பாதிப்பால் S-Passக்கும் கட்டுப்பாடு போடப்பட்டு வருகிறது. கோட்டாக்கள் கட்டுபடுத்தப்பட்டு இருப்பதால் S-Pass அளவும் குறைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட S-Pass கிடைப்பதே அரிதாகி இருக்கிறது. இதை தொடர்ந்து பலரின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த பிரச்னையுமே வரும் ஜனவரிக்கு மேல் கோட்டாக்கள் ரிலீஸ் செய்தால் மட்டுமே சரியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது வரும் ஜனவரி 1ந் தேதி வெளியிடாத பட்சத்தில், சைனீஷ் நியூ இயருக்கு தான் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேல் கூறிப்பிட்ட இந்த பாஸ்களுக்கு எல்லாம் சிங்கப்பூர் அரசுக்கு levy கட்டப்பட வேண்டும். இதனால் கம்பெனிகள் நல்ல அனுபவம் இருக்கும் முதுகலை பட்டம் வைத்திருப்பவர்களை E-passக்கு எடுத்து கொள்ளும். தற்போது இந்த பாஸிலும் கூட போடப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக நிலுவையில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஏற்கனவே சிங்கப்பூரில் பணி அனுபவம் இருந்தால் சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ப்ரஷர்களுக்கு E-pass தற்போதைய சூழலில் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை.

இந்த நிலமை விரைவில் கட்டுப்படுத்தப்பட புதிய வொர்க் பெர்மிட் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கிறது. இந்த பெர்மிட் குறித்த தகவல்கள் ஏற்கனவே இந்த வருட தொடக்கத்தில் இருந்து பேச்சுவார்த்தையில் தான் இருந்து வருகிறது. நிலைமை கட்டுபாட்டுக்கள் வர அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்கு மேல் இந்த புதிய வொர்க் பெர்மிட் குறித்து அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் MOM தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உங்களிடம் தெளிவாக தமிழ் சாகாவில் தெரிந்து கொள்ளலாம்.

Sources:

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts