சிங்கப்பூர்-ன் மிகவும் பிரபலமான சுற்றுலா Spot-ஆக இருப்பது தான் Merlion சிலை! 1972 முதல் சிங்கப்பூர் என்றாலே இந்த சிலை தான் அனைவருக்கும் நினைவில் வரும். சிங்கப்பூர் சென்றவர்கள் யாரும் இந்த சிலை முன் நின்று புகைப்படம் எடுப்பதை மறப்பதில்லை.
சிங்கப்பூர் ஆற்றின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த சிலை 1972-ல் அப்போதைய அதிபர் Lee Kuan Yew-வால் திறந்து வைக்கப்பட்டது.
சிங்க முகம் மற்றும் மீன் உடம்பு கொண்ட இந்த சிலை 8.6 மீட்டர் உயரம் 70 டன் எடையும் கொண்டது. சிங்கத்தின் வாயிலிருந்து நீர் வெளியேறும் படி அமைக்கப்பட்ட இந்த சிலையானது இன்று வரை சிங்கப்பூரின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
சிங்கப்பூர் சுற்றுலாத்துறை இன்று (05-07-2024) வெளியிட்ட அறிக்கையில் இந்த Merlion சிலை வருகிற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ளது. அதற்காக சிலை முழுவதும் திரையிட்டு வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஐந்து நாட்களும் merlion சிலைக்கு வர நினைக்கும் சுற்றுலா பயணிகளுக்கும், சுற்றுலா ஏஜெண்டுகளுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அருகில் உள்ள சிறிய Merlion Cub சிலை திறந்து தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அருகில் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும். பயணிகள் பொறுத்துக் கொள்ளுமாறும் சிங்கப்பூர் சுற்றுலாத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சிலையின் பராமரிப்பு பணிகள் கடைசியாக 2023 September 25 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெறும் இந்த குறைந்த கால பராமரிப்பு பணிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தருமாறு சுற்றுலாத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட நாட்களில் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்ளோர் வாசிகள் Merlion சிலையைக் காண நினைத்தால் உங்களது பயணத்தை சற்று தாமதமாக்கிக் கொள்வது நல்லது!