TamilSaaga

Work Permit Holders-ன் பாரத்தை குறைத்த சிங்கப்பூர் அரசு.. SHN கட்டணம் குறைப்பு – அதிலும் காசு பார்த்த சில முதலாளிகளுக்கு “நெத்தியடி”

சிங்கப்பூரில் Work Permit Holders-ன் Entry Approvals SHN (Stay Home Notice) 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக மாற்றியிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், அதன் கட்டணத்தை தற்போது சிங்கப்பூர் அரசு குறைத்துள்ளது.

முன்னதாக 2,450 டாலர்கள் இதன் கட்டணமாக சிங்கப்பூர் அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அதனை 2,050 டாலராக அரசு குறைத்துள்ளது. சமீபத்தில் Approval ஆனவர்களுக்கும் இந்த புதிய கட்டணம் செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க – “தூற்றிய சொந்த ஊர்”.. உயிரை விட்ட தந்தை.. சிங்கப்பூரில் வேலைப்பார்த்து 5000 பேருக்கு சாப்பாடு போட்டு அக்காவுக்கு கல்யாணம் – மகன்னா இப்படி இருக்கணும்!

இதனை தொழிலாளர்கள் வேலைப்பார்க்கும் முதலாளிகள் தான் செலுத்த வேண்டும். ஆனால், சில முதலாளிகள் தொழிலாளர்களிடம் இருந்தே.. அதாவது அவர்களது ஊதியத்தில் இருந்தே பிடித்தும் செய்து கொள்கின்றனர். இந்த சூழலில் தான், SHN கட்டணத்தை 2,450 டாலர்களில் இருந்து 2,050 டாலர்களாக சிங்கப்பூர் அரசு குறைத்துள்ளது.

மேலும் படிக்க – திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு – ஒரேடியாக டிச.31, 2022 வரை பயண நேரத்தை மாற்றிய INDIGO – Exclusive Report

மேலும், பயணிகள் ஏர்போர்ட்டில் இருந்து SHN மையத்துக்கு செல்ல டாக்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்திலோ அல்லது MRT-யிலோ பயணம் செய்யக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600223091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts