Work Permit வைத்திருக்கும் ஊழியர்கள், வரும் மே மாதம் 1ம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் வருவதற்குரிய அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இந்த தளர்வு மலேசியர்கள் அல்லாதவர்களுக்கும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பொருந்தும். அதேசமயம், முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகளுக்கான நுழைவு அனுமதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் MOH தெரிவித்துள்ளது.
இந்த நாள் வரை Construction, கப்பல் துறைகளில் In-Principal Approval எனும் பொது அனுமதி பெற்றவர்கள், சிங்கப்பூருக்குள் நுழைய entry approval பெற வேண்டியுள்ளது. ஆனால், புதிய தளர்வுகளின் படி, இனி entry approval பெறத் தேவையில்லை என்று MOM அறிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகளுக்கான நுழைவுத் தேவைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் MOH கூறியது. மேலும், 13 வயது மற்றும் அதற்கு மேல் தடுப்பூசி போடாத பயணிகள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
அதே போல ஏழு நாள் வீட்டில் தங்குவதற்கான அறிவிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இறுதியில் PCR COVID-19 சோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.