TamilSaaga

உலக அளவில் முதல் இடத்தை பெற்ற சிங்கப்பூர்… 50 ஆண்டுகள் இல்லாத சாதனை… எதில் தெரியுமா?

தடையில்லாத பொருளாதாரத்தை பெற்றிருக்கும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 50 வருடங்களுக்கும் மேலாக ஹாங்காங் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார சுதந்திரத்தை குறிப்பிடும் பொருளாதார சுதந்திர குறியீடு ஆனது 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஹாங்காங் தான் முதலிடத்தில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகிய அறிக்கை படி, பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் ஹாங்காங் அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் இனிவரும் வருடங்களில் ஹாங்காங் மேலும் பல படிகள் கீழே இறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி சிங்கப்பூர் முதலிடத்திலும், ஸ்விட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்றவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

Related posts