TamilSaaga

சாங்கி ஏர்போர்ட்டில் நடந்த சண்டை.. பலர் பார்க்க கணவர் மீது சரமாரியாக குற்றம்சாட்டிய மனைவி – மகனை பிரிந்து தவித்த தாய்க்கு கிடைத்த பரிசு!

சிங்கப்பூரில் கடந்த ஜூன் 2022ல், சாங்கி விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் (Arrival Hall) வைத்து தனது கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு தற்போது அவரை தொடர்பு கொள்ள நினைக்கும்போதெல்லாம் தன்னை தவிர்ப்பதாக பொதுவெளியில் ஒரு பெண் கூச்சலிட்டார்.

அங்கு குழுமியிருந்த பலருக்கு ஒரு பெண் தனது கணவரை பார்த்து கோபத்துடன் கத்துகிறாள் என்று தான் தோன்றியது. ஆனால் விஷயம் அதுவல்ல.. சரி அந்த பெண்ணின் விஷயத்தில் என்ன தான் நடந்தது?

திருமணம் ஆகாமல் ஒன்றாக இணைந்து வாழும் இந்த கணவனும் மனைவியும் தங்கள் மகனுடன் இணைந்து தங்கள் திருமணத்தை பற்றி பேச முடிவு செய்துள்ளனர். ஜோகர் பஹ்ருவில் உள்ள தங்கள் வீட்டுக்கு தந்தையுடன் மகனை அனுப்பிவிட்டு அந்த தாய் மட்டும் பொதுப்போக்குவரத்தில் அங்க சென்றுள்ளார்.

திருமணத்தை பற்றி பேச ஆவலாகவும் மீண்டும் தனது மகனை காண ஆசையுடனும் காத்திருந்த பெண்ணுக்கு ஏற்பட்டது ஒரு அதிர்ச்சி. காரணம் சொன்னபடி தனது மகனுடன் அந்த தந்தை அங்கு வரவில்லை.

இரவு பகல் உறக்கமின்றி உழைப்பு.. தனியொருத்தியாக சிங்கப்பூரில் 3 பிள்ளைகளை வளர்த்த “தெய்வத் தாய்” – இறப்பிலும் உலகிற்கே உதவிய நல்ல உள்ளம்

அதன் பிறகு என்ன நடந்தது?, அந்த பெண் நீதிமன்றத்தை நாடினாரா? என்பது குறித்த தகவல்கள் இல்லை என்றபோது தற்போது தனது மகன் தனக்கு கிடைத்துவிட்டதாகவும்,” நிம்மதியாக என் மடியில் உறங்கு மகனே” என்று அவர் எழுதி வெளியிட்ட பதிவும் தற்போது வெளியாகியுள்ளது.

சாங்கி விமான நிலையத்திலும் கூட தனது மகனை பார்த்தும் அவனை தன்னுடன் அழைத்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாலேயே அந்த பெண் தனது கணவருடன் சண்டையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனடித்து மகன் தன்னுடன் இருப்பதால் தனக்கு ஒரு புது நம்பிக்கை கிடைத்துள்ளது அவர் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts