TamilSaaga

Sinovac தடுப்பூசியால் பக்கவிளைவுகள் உண்டா ? – முழு விளக்கம் அளித்த அமைச்சர் ஓங்

நேற்று சிங்கப்பூரில் நடந்த நாடாளுமன்ற அமர்வில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் Sinovac தடுப்பூசி சிங்கப்பூரில் எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது, மேலும் அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு சுகாதார அமைச்சர் ஓங் பதிலளித்தார். அதில் ஜூலை 3ஆம் தேதி வரை சிங்கப்பூரில் சுமார் 17 ஆயிரத்து 296 பேருக்கு Sinovac தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களால் சிலர் mRNA தடுப்புமருந்து ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது.

அவர்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கபடும் என்றும், அதற்கான செலவை அரசாங்கமே ஏற்கும் அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் Sinovac தடுப்பு ஊசி கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இதை போட்டுக்கொண்ட இரண்டு பேருக்கு சாதாரண பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts