TamilSaaga

யாருமே எதிர்பார்க்காத முடிவு.. கல்லூரி முடித்த உடனே சிங்கப்பூர் ராணுவத்தில் இணைந்த “சிங்க மகள்” – கட்டுப்பாடுகளை வெறுத்தவர் இன்று மாஸ் காட்டும் அதிகாரி!

கட்டுப்பாடுகள், விதிமுறைகள், கடுமையான உத்தரவுகள் போன்ற வார்த்தைகள் எல்லாம் அலர்ஜியாக இருக்கும் ஒருவர் ராணுவத்தில் சேர்ந்தால்…? யாருமே எதிர்பார்க்காத போது, அவர் அந்த வேலையை நேசித்து ஏற்றுக் கொண்டால்….?

இப்படி ஒரு நகைமுரண் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம்பெண் Rose Koh, கடந்த 2019ம் ஆண்டு தான் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அந்த நாள் வரை, ராணுவம் மற்றும் அதன் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் கண்டால் தெறித்து ஓடியதில் முதல் ஆளாய் விளங்கியவர் இவர். outdoors, camps, and regiment என்று சொன்னாலே அந்த இடத்தை விட்டு வெளியேறும் ஆளாக இருந்தவர் Rose Koh.

இன்னும் சொல்லப்போனால், அவர் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பள்ளி சார்பாக அழைத்துச் செல்லப்பட்ட Outdoor Camp-ன் போது, அங்கிருந்த கட்டுப்பாடுகளை சமாளிக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுத Rose Koh-ஐ, பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டிற்கு அவர் தாய் அழைத்துச் சென்ற அளவுக்கு ராணுவத்தின் மீது பிடிப்போ, விருப்பமோ இல்லாமல் இருந்தவர் இவர்.

இந்த சூழலில் தான், தனது பட்டப்படிப்பின் கடைசி ஆண்டில் இருந்த Rose Koh, படித்து முடித்தவுடன் தனது எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது? நாம் என்னவாக வேண்டும்? என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவரது ஆண் நண்பர்கள் பலர் National Service (NS)-ல் இருந்தனர். அதில் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டார். நாட்டுக்காக சேவை செய்யும் எண்ணம் தோன்றியது.

இறுதியில், தனக்கென்று ஒரு வட்டம் அமைத்து, அதில் சொகுசாக (அல்லது) இலகுவாக வாழ்ந்து வந்த தனது வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவெடுத்து, Singapore Armed Forces (SAF)-ல் பணிபுரிவது என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்.

மேலும் படிக்க – இன்னும் இரண்டே மாசம் தான்… “4000 பேருக்கு” வேலை வாய்ப்பு – 3 வருடத்துக்கு முந்தைய அதே ‘பரபர’ சிங்கப்பூர் ரெடி! – அரசின் மிகப்பெரிய அறிவிப்பு!

இருப்பினும், Rose Koh-ன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரது முடிவு அவ்வளவு உறுதியாக இருக்கும் என்று நம்பவில்லை. அவர் கடுமையான இராணுவப் பயிற்சிய தொடர முடியாமல் வெளியேறிவிடுவார் என்று நினைத்தனர். ஆனால், அனைவரது கணிப்புகளையும் தவிடுபொடியாக்கிய கோ, அடிப்படை இராணுவப் பயிற்சியை (BMT) முடித்ததோடு மட்டுமல்லாமல், அதிகாரி கேடட் பள்ளியில் தனது அதிகாரி கேடட் பயிற்சியின் ஒரு பகுதியான jungle confidence course (JCC) முடித்து அசத்தினார்.

மொத்தம் 8 நாட்கள் கொண்ட இந்த jungle confidence course குறித்து பேசிய கோ, “பயிற்சியின் போது கால்களில் பல இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இருப்பினும், ஆறாவது மற்றும் ஏழாவது இரவுதான் “மிகவும் மறக்கமுடியாதது”. இந்த இரண்டு இரவுகளின் போதும் மழை கொட்டியது, நான் தூங்கும் பகுதியைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது. அந்த குளிர் என் உடலை உறைய வைத்தது. குளிரால் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு நான் எழுந்து உட்கார்ந்து கொள்வேன். தூங்க முடியாது.

இப்போது கூட ராணுவத்தில் இணைந்ததற்காக தான் ஒரு நொடி கூட வருத்தப்படவில்லை” என்று பெருமை பொங்க தெரிவித்துள்ளார் சிங்கையின் ‘சிங்கப் பெண்’.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts