TamilSaaga

அடடா.. இதுவல்லவா தெய்வீக காதல்! சிங்கப்பூரில் $2,500 டாலருக்காக காதலனின் நிர்வாண படங்களை பெற்ற தாய்க்கே அனுப்பிய காதலி!

காதலில் எத்தனையோ ரகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்படியொரு ரகத்தை கண்டிருப்பது அரிது. Medical Miracle என்று கூட சொல்லலாம்.

பொதுவாக காதலியை ஏமாற்றி, நிர்வாண புகைப்படங்கள் எடுத்து மிரட்டும் காதலனைத் தான் பார்த்திருப்போம். இங்கு அப்படியே ரிவர்ஸ். ஒரு காதலி, தனது காதலனை பணத்துக்காக அப்படி மிரட்டியிருக்கிறார்.

ஆம்! சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர் Zhang Xilin. இந்த பெண்ணுக்கும் சிங்கையைச் சேர்ந்த ஒரு நபருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு சமூக தளத்தில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, ஜோடியாக சுற்றித் திரிந்துள்ளனர்.

ஹோட்டலுக்கு செல்வது, அந்த நபர் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டுக்கு செல்வது என்று ஜோடி உல்லாசமாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இருவரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுவதும், காம செயல்பாடுகளில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளனர். மேலும், அந்த பெண்ணுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களையும் இந்த நபர் கொடுத்திருக்கிறார்.

மேலும், Zhang-க்கு தான் 2,500 டாலர் கொடுப்பதாக வாக்களித்த அந்த நபர், அப்பணத்தைக் கொண்டு Zhang-ன் ஏஜென்சிக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அவரது வேலையை விட்டு வெளியேற உதவுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – “பணி நிமித்தமாக வெளிநாடு பயணம்”.. கண்ணசைவில் Immigration அதிகாரியையே காதலித்து கரம் பிடித்த இந்தியர் – கத்துக்கணும்!

ஆனால், Zhang சிங்கப்பூரில் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற தகவல் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி, அந்த நபர் தன் நிர்வாண புகைப்படங்களை Zhang-கிற்கு அனுப்பினார். அதில் அவரது முகம் மற்றும் அந்தரங்க உறுப்புகள் தெரிந்தன.

சில நாட்களுக்குப் பிறகு ஜூன் 21 அன்று, அந்த நபர் Zhang-ஐ வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் ப்ளாக் செய்தார்.

பிறகு சிறிது நாளில் மீண்டும் அந்த பெண்ணை UNBLOCK செய்துவிட்டு, விரைவில் ஏஜென்சி கட்டணத்தை செலுத்துவதாக கூறியுள்ளார்.

இந்த சூழலில் தான் கடந்த ஜூன் 23ம் தேதி Zhang தனது வேலையை காட்டியுள்ளார். ஏஜென்சி பணத்தை தராவிட்டால், உன்னுடைய நிர்வாண புகைப்படத்தை உனது தாய் மற்றும் பெண் தோழியிடம் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

ஒருக்கட்டத்தில், Zhang அந்த நபரின் தாய் மற்றும் பெண் தோழிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவிட, பீதியடைந்த அந்த நபர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டிய Zhang-க்கு ஒன்பது வார சிறைத்தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts