TamilSaaga

சிங்கப்பூரில் உயரப்போகும் ரயில் மற்றும் பேருந்து கட்டணம்… எவ்வளவு காசுகள் உயரும் தெரியுமா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் அட்டை வழியாக பணம் செலுத்துவோருக்கான பேருந்து மற்றும் ரயில் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசுகள் உயரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிங்கப்பூரிலேயே இதுவரை அதிகரிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டண உயர்வு இதுவாகும். பெரியவர்களுக்கான கட்டணத்தில் 4.2 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பெரியவர்களுக்கு பத்து காசு உயரும் எனவும் அதற்கு மேல் பயணிப்பவர்களுக்கு 11 காசு உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று முதியவர்கள், மாணவர்கள், உடலில் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் குறைந்த வருமான ஊழியர்கள் பயன்படுத்தும் சலுகை அட்டையில் 4.2 கிலோமீட்டர் வரை பயணித்தால் நாலு காசு உயரும் எனவும் அதற்கு மேல் தூரம் அதிகமாகும் பட்சத்தில் 5 காசுகள் உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் கட்டணம் ஆனது 7 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களுக்கு டிசம்பர் 23ஆம் தேதி முதல் புதிய சலுகை அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அட்டைக்கு செலுத்தப்படும் கட்டணமானது 32 டாலர் குறையும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாத வருமானம் குறைவாக பெரும் குடும்பங்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts