TamilSaaga

Exclusive: பிப்.22 முதல் VTL மூலம் “Entry approval” இல்லாமல் சிங்கப்பூர் வரலாம் – ஆனால் MOH அறிவிப்பை மறுக்கும் விமான நிறுவனங்கள் – முன்பதிவு செய்தவர்களின் நிலை?

Singapore: Work permit holders தவிர்த்து, முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட long-term pass holders-களுக்கான Entry approval requirements பிப்ரவரி 21 முதல் விலக்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த (பிப்.16) அறிவித்தது. ஆனால், இந்த நிமிடம் வரை எந்த விமான நிறுவனங்களும் இப்படியொரு தகவல் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOH கடந்த பிப்.16ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அதாவது, Work permit holders தவிர்த்து, முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட long-term pass holders, VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய vaccinated travel pass -க்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை” என்று குறிப்பிடப்பட்டது.

VTL அல்லாத வழிகளில் சிங்கப்பூருக்கு வருபவர்கள் entry approval-லுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை, ஆனால் நடைமுறையில் உள்ள immigration entry requirements மற்றும் சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க – வேலைபார்த்த நிறுவனத்துடன் தகராறு : சிங்கப்பூர் சிறையில் “வெளிநாட்டு தொழிலாளி” – போதையில் அவர் செய்த “அலம்பல்”

இந்த புதிய அறிவிப்பு, Employment பாஸ், dependant’s பாஸ் அல்லது S Pass போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தும். மேலும், பிப்ரவரி 21 அன்று இரவு 11.59 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அனைத்து பயணிகளும் தங்கள் வருகைக்கு முன் உடல்நலம் மற்றும் travel declaration-ஐ தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் தங்கள் உடல்நிலை மற்றும் சமீபத்திய பயண வரலாறு, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்களை வழங்க வேண்டும் என்று MOH அறிவித்தது.

இந்நிலையில், பிப்.21 நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அனைத்து விமான நிறுவனங்களும் MOH அறிவித்த எந்தவொரு தகவல்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றன. இதுகுறித்து தமிழ் சாகா சிங்கப்பூர் – நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனங்கள் சார்பாக Air India, Indigo உள்ளிட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசிய போது, “இதுவரை தங்களுக்கு எந்த தகவலும், Circular-ம் வரவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், MOH-ன் இந்த அறிக்கைக்கு பிறகு கடந்த 2 நாட்களாக அதிகப்படியான Flight Inquiries வருவதுடன் பலரும் ஆன்லைனில் அவசர அவசரமாக தாங்களாகவே புக்கிங்கும் செய்து வருகின்றனர். ஆனால் விமான நிறுவனங்களோ ‘தங்களுக்கு இப்படியொரு தகவலே கிடைக்கவில்லை’ என்று நாம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு கூறுகின்றன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் அதிகம் சம்பாதிப்பவர்கள் “உச்” கொட்ட வைக்கும் அறிவிப்பு.. 2022 பட்ஜெட்டின் வரி மாற்றங்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

இப்போது இதில் சிக்கல் என்னவெனில், சில ஏர்லைன்ஸில் Ticket Refund Option கிடையாது. ஆகையால், தாங்களாகவே வெப்சைட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், ஏஜென்சி மூலம் டிக்கெட் புக் செய்தாலும், பயணம் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காது. MOH இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், விமான நிறுவனங்கள் “காந்தி செத்துட்டாரா?” மோடில் இருக்கின்றன.

இதனால், ஏர்லைன்ஸில் இருந்து முறையான அறிவிப்பு வெளியான பிறகு, அவர்களின் Rules and Regulations வெளியான பிறகு டிக்கெட் முன்பதிவு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

Content Source: Nandana Air Travels, Trichy

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts