டான் பூன் ஹோ (Tan Boon Hoe) என்பவர் 24 வருடங்களாக சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டும் அனுபவமுள்ள ஒரு மிக மூத்த cabby. (பிக்பாஸ் கேபி இல்லீங்க.. காலங்காலமாக கேப் ஓட்டி வருவதால் cabby).
இந்த தொழிலில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் டான் பூன், முதன் முதலாக கடந்த ஜன. 13, 2022 அன்று, அவர் தனது டாக்ஸியில் ஒரு குழந்தை பிறந்ததை முதன்முதலில் கண்டிருக்கிறார்.
ComfortDelGro Taxi இன் முகநூல் பதிவில், ஜனவரி 13 அன்று அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பூரின் Ubi யில் இருந்து ஒரு ஜோடியை அழைத்து வந்ததாக நம்ம கேபி பகிர்ந்துள்ளார்.
காரில் ஏறிய அந்த கர்ப்பிணிப் பெண் பயணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்படுவது போல் தோன்றியதால், தம்பதியினர் கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினர்.
இருப்பினும், பயணத்தின் பாதியிலேயே அவரது தண்ணீர் பை உடைந்தது.
அப்பெண் “குழந்தை வெளியே வருகிறது!” என்று சப்தமாக கூச்சலிட்டாள்
https://www.facebook.com/ComfortDelGroTaxi/posts/1671531459852000
குழந்தை பிறந்த பிறகு, அந்த பபெண்ணின் கணவர் டானுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு டிப்ஸ் கொடுத்தார்.
ComfortDelGro நிறுவனம் டான் தனது டாக்சியை சுத்தம் செய்ய நிதியுதவி செய்தது.
இதுகுறித்து டான் கூறுகையில், “இது போன்ற காலங்களில் இப்படியொரு அதிசயத்தைக் கண்டது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக அமைந்தது. ஒரு புதிய உயிர் உறுதியாவதற்கு காரணமாக இருந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு வழக்கமான பயணம் என்பதால், பயணிகளின் விவரங்களைப் Tan பெற முடியவில்லை.
இதுகுறித்து அவர், “அந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அது ‘டாக்ஸியில் பிறந்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்” என்று பதிவிட்டுள்ளார்.