சிங்கப்பூர் வேலை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமில்லை. உயர்மட்ட வேலையில் இருந்து கடைசிகட்ட தொழிலாளி வரை எந்த கட்டத்தில் வேண்டுமென்றாலும் உங்களால் சிங்கப்பூரில் பணிக்கு வரமுடியும். சரி அப்படி வெளிநாட்டு தொழிலாளராக சிங்கப்பூருக்கு நீங்கள் வரும்போது உங்களுக்கு கூறிய வேலை அளிக்கப்படுமா? அப்படி அளிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது? இந்த பதிவில் காணலாம்.
முதலில் சிங்கப்பூர் புறப்படும் முன் நீங்கள் செய்யவேண்டியது.
அரசு அல்லது தனியார் ஏஜென்ட் மூலம் நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கு முன்பும், அந்த ஏஜென்டிடம் உங்கள் வேலைக்கு தேவைப்படும் சேவை கட்டத்தனத்தை கொடுக்கும் முன்பும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் உங்களுக்கு என்ன வேலை அளிக்கப்படப்போகிறது என்பதை தெளிவாக கேட்டறிய வேண்டும்.
Construction, Electrical, Mechanical என்று பல துறைகள் உள்ள நிலையில் அதில் நீங்கள் எந்த துறைக்கு? என்ன வேலைக்கு செல்லஉள்ளீர்கள் என்பது தீர விசாரித்து அதன் பிறகு தேவையான கட்டணத்தை செலுத்துவதே சாலச்சிறந்தது. ஆனால் சில சமயங்களில் ஹெல்பேர் போன்ற பணிகளில் வரும்போது நீங்கள் அழைத்துவரப்படும் நிறுவனத்திற்கு ஏற்ப சில சமயங்களில் உங்கள் வேலையில் மாற்றமும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் எனக்கு அவர்கள் தரும் வேலை பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ள முடியுமா?
ஹெல்பர் போன்ற முதற்கட்ட வேலைவாய்ப்புகளில் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் எழும், உதாரணமாக நீங்கள் Construction துறையில் வேலைக்கு செல்லும்போது அவர்கள் அளிக்கும் வேலை உங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால் முதலில் உங்களுக்கு மேல் உள்ள அதிகாரியை நாடி ஏன் இந்த வேலை உங்களுக்கு சரிவரவில்லை என்பதை தெரிவியுங்கள். காரணம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் உங்களுக்கு தகுந்தார் போல அவர்கள் வேலையை மாற்றித்தர வாய்ப்புகள் அதிகம் உண்டு. சிங்கப்பூரில் தற்போது பணி செய்யும் பலரும் இதை அனுபவ பூர்வகமாக உணர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி சிங்கப்பூரில் எனக்கு சொன்ன வேலை ஒன்று ஆனால் செய்ய சொல்வது ஒன்று இதை எப்படி சமாளிப்பது?
சிங்கப்பூரை பொறுத்தவரை இந்த பிரச்சனை வெகு சில நேரங்களில் மட்டுமே வரும், உங்களுக்கு அவர்கள் சொல்லி அழைத்து வந்த வேலை ஒன்றாகவும், செய்யச்சொல்லும் வேலை ஒன்றாகவும் இருக்கும்பட்சத்தில் நீங்கள் முதலில் உங்கள் Supervisorஐ அணுகி சொல்ல வேண்டும். நிச்சயம் அந்த நிலையிலேயே உங்களுக்கு கூறப்பட்ட வேலை மாற்றித்தரப்படும்.
ஆனால் Supervisor தொடங்கி HR வரை உங்கள் குறைகளை கூறியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதன் பிறகு நிச்சயம் நீங்கள் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் உதவியை நாடலாம். உண்மையான காரணங்களுக்காக மனிதவள அமைச்சகத்தை நாடுவதால் எதிர்காலத்தில் எந்தவித பிரச்னையும் வருமோ என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம்.
யாருமே உதவி செய்யாதபட்சத்தில் MOM நிச்சயம் உங்கள் குறைகளை தீர்த்து நீங்கள் சிங்கப்பூரில் நல்ல முறையில் பணி செய்ய உதவும் என்பதில் சந்தேகமில்லை.