வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்வார்கள் ஆனால் பல தமிழ் குடும்பங்களை வாழ வைத்த பெருமை சிங்கப்பூருக்கே என்று சொன்னால் மிகையாகாது.
தமிழர்களுக்கு மிக நெருக்கமான உணர்வை கொடுக்கும் நாடுகளில் ஒன்று தான் சிங்கப்பூர்.
தமிழர்களின் வளர்ச்சியில் சிங்கப்பூருக்கு மிகப்பெரும் பங்கு வகிப்பது போல் சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் தமிழர்களின் பங்கு அளப்பரியது அதனால் தான் தமிழ்மொழி சிங்கப்பூரின் அரசாங்க அலுவலக மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது.
கடினமான சட்டங்களாலும் திறமையான உழைப்பினாலும் உயர்ந்த நாடு சிங்கப்பூர் ஆகையால் திறமைசாலிகளுக்கு சிங்கப்பூரில் நிரந்தர இடம் உண்டு ஆண் பெண் என்ற பேதமில்லை மொழி இனம் என்ற வேற்றுமை இல்லை எல்லோருக்கும் சம உரிமை உண்டு இவ்வாறு பல அருமையான அம்சங்களையும் சிறப்பான வாய்பபுகளையும் வழங்கும் சிங்கப்பூரை யார் தான் விரும்ப மாட்டார்கள்.
சிங்கப்பூரில் ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய மொழிகள் உள்ளன. 74.4% சீனர்கள், 13.5% மலாய்க்காரர்கள், 9% இந்தியர்கள், 3.2% பிற இனத்தவர்கள்.சிங்கப்பூர் தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. இது மலேசியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.
1824 – ல் சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியாக மாறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அது அதிக தமிழ் மக்களைக் கொண்டிருந்தது. ஏனெனில் சிங்கப்பூர் தீவு “ராஜேந்திர சோழ சாம்ராஜ்யத்தின்” ஒரு பகுதியாக இருந்தது. இக்காலகட்டத்தில்தான் தமிழர்கள் பலர் சிங்கப்பூருடன் வணிகம் செய்தனர். சிங்கப்பூர் தமிழ் மக்களால் நிறைந்துள்ளது. அதாவது தமிழர்கள் இந்திய வம்சாவளி மக்களில் பெரும் பகுதியினர்.
மூன்றாவது பெரிய இனமாக தமிழ் மக்கள் உள்ளனர். சிங்கப்பூருக்கும் தமிழ் மக்களுக்கும் நீண்ட வரலாறு உண்டு. சிங்கப்பூர் என்ற பெயர் சமஸ்கிருதத்திலிருந்து அல்லது தமிழில் இருந்து வந்தது. இரண்டு மொழிகளிலுமே சிங்கம் மற்றும் துளை என்றால் நகரம். இதனால் சிங்கையின் நகரம் என்பதால் “சிங்கப்பூர் “என்று அழைக்கப்பட்டது. “தமிழர்களும் சிங்கப்பூரும், 1000” ஆண்டுகள் பழமையான பந்தத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஏற்கனவே வண்ணமயமான நகரத்திற்கு “தமிழர்கள் மேலும் பல வண்ணங்கள்” சேர்க்கிறார்கள்.