TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மன உளைச்சலால் அவதி… அதிலும் இளைஞர்கள் தான் அதிகம்!

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 50 சதவீத ஊழியர்கள் மன உளைச்சலுடன் இருப்பதாக கூறியுள்ளனர். சுகாதார தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெலஸ் ஹெல்த் எனப்படும் நிறுவனம் 20 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மனநிலை குறித்த ஆய்வினை மேற்கொண்டது.

ஆசியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் சுமார் 1000 பேர் பங்கு கொண்டனர். நோய் தொற்று பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தாலும், 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது சென்ற ஆண்டு அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக 52% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணவீக்கம், பணிகளில் ஆட்குறைப்பு, சுகாதார குறைபாடு போன்ற காரணங்களே மன உளைச்சலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதில் 50 விழுக்காடு ஊழியர்கள் வேலை முடிந்ததும் மிகவும் சோர்வாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். வயது முதிர்ந்தவர்களுடன் ஒப்பிடும் பொழுது இளைஞர்களே அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

Related posts