TamilSaaga

Work Pass -ல் இருப்பவர்கள் சிங்கப்பூரில் Degree படிக்க முடியுமா? எந்த University best ?

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் work pass, student pass, s pass என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உள்ளன. சிங்கப்பூரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் முழு நேர கல்வி பெறுவதற்காக student pass பெற்றிருக்கும் மாணவர்கள், தங்களின் படிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக part time வேலை செய்ய முடியும். ஆனால் இதற்கும் வேலை நேரம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் உள்ளன.

அதே சமயம் work pass ல் சிங்கப்பூர் வந்த ஒருவர், முழு நேரமாக degree படிக்க முடியாது. அதே சமயம் ஏதாவது ஒரு University ல் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஒருவேளை நீங்கள் முழு நேரமாக degree படிக்க விரும்பினால், நீங்கள் வைத்திருக்கும் work pass ஐ ரத்து செய்து விட்டு, student pass க்கு apply செய்து, பெற்றுக் கொண்டு, University ல் சேர்ந்து படிக்கலாம். இதற்கும் சில கட்டுப்பாடுகள், விதிமுறைகளை சிங்கப்பூர் அரசு வகுத்துள்ளது. சிங்கப்பூர் Ministry of Manpower அல்லது அது தொடர்பான அதிகாரிகளை இமெயில் மூலமாக தொடர்பு கொண்டு இது குறித்து முழு விபரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். சிங்கப்பூரில் ஏதாவது பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு student pass கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் ஆன்லைன் அப்ளிகேஷன் அளிக்கும் போதே, அதோடு student pass நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

work pass என்பது நீங்கள் யார், எந்த நிறுவனத்தில் சட்டப்பூர்வமாக பணியாற்றுகிறீர்கள் என்பதை கண்டறிவதற்கான அடையாள சான்றாகும். வெளிநாட்டை சேர்ந்த மாணவர் அல்லது பயிற்சியாளர் ஒருவர், Training Work Permit, a Training Employment Pass, அல்லது Work Holiday Programme ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும். உரிய work pass இல்லாத வெளிநாட்டு மாணவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியாது.

சிங்கப்பூரின் டாப் 10 பல்கலைகழகங்கள் :

  1. National University of Singapore
  2. Nanyang Technological University
  3. Singapore University of Technology and Design
  4. Singapore Management University
  5. Singapore Institute of Management
  6. INSEAD – Singapore
  7. PSB Academy
  8. SP Jain School of Global Management
  9. Singapore Institute of Technology (SIT)
  10. James Cook University – Singapore (JCU)

இவைகள் சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக அளவிலும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்பவைகளாகும். BBA, MBA, BE, MIM, B.Tech,MS,BHM உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts