TamilSaaga

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் வேலை அனுமதி” – அறிவித்த MOM : முழு விவரம்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு காலாவதியாகும் சில துறைகளில் வேலை அனுமதி பெற்றவர்கள் புதுப்பித்தல் அளவுகோல்களை பூர்த்தி செய்யாவிட்டாலும் இரண்டு ஆண்டுகள் வரை தங்கள் அனுமதிகளை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வேலைவாய்ப்பு காலத்தை அடையும் அல்லது அதிகபட்ச வேலைவாய்ப்பு வயதை எட்டிய பணி அனுமதி பெற்றவர்கள் இதில் அடங்குவர். நிறுவனங்கள் தங்கள் வேலை அனுமதி வைத்திருப்பவர்களில் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்தை உயர் திறமையான தொழிலாளர்களாக பராமரிக்க தேவையில்லை என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டுமானம், கப்பல் கட்டிடம் மற்றும் செயல்முறை (சிஎம்பி) ஆகிய துறைகளில் தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்தும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்று எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக மனிதவள நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதும் நினைவுகூரத்தக்கது.

வேலை அனுமதி ரத்து செய்யப்பட்ட அல்லது காலாவதியான, மற்றும் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

Related posts