TamilSaaga

“இந்தியாவில் இருந்து House Maid விசாவில் சிங்கப்பூர் வருபவர்கள்” : புதிய நிபந்தனையை விதித்த Indigo

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே Travel Bubble சேவை தொடங்கியதை அடுத்து, பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் வாரத்திற்கு மொத்தம் 3,618 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1,624 இருக்கைகள் சென்னை – சிங்கப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள திறன் சிங்கப்பூர் செல்வதற்கு VTL அல்லாத நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்தப்படும் என்றும் அப்போது கூறப்பட்டது. “தொற்றுநோயிலிருந்து வெளியே வரும்போது, ​​Travel Bubble ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூருக்கு விமானங்களை மீண்டும் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத 52,000 பணியாளர்கள்”

சர்வதேச பயண தேவையை மெதுவாக மீண்டும் கொண்டு வருவதற்கு ​​Travel Bubble ஏற்பாட்டின் கீழ் சர்வதேச இணைப்பு உதவியாக உள்ளது. நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் இது இந்தியா மற்றும் சிங்கப்பூர் குடிமக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக எளிதாக பயணிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறினார். மேலும் VTL சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் VTL அல்லாத சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது இண்டிகோ நிறுவனம் ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி சிங்கப்பூருக்கு House Maid பணிக்கு வரும் அனைவரும் இங்கு வருவதற்கு முன்பாக Return Ticket வைத்திருக்க வேண்டும் அல்லது Return Ticket எடுக்கும் அளவிற்கு கையில் பணமிருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை தற்போது விதித்துள்ளது Indigo விமான சேவை நிறுவனம்.

காரணம் என்ன?

இந்தியாவில் இருந்து House Maid விசாவில் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகு நடத்தப்படும் ஆவண சரிபார்ப்பில் சிக்கல் இருந்து அவர்கள் மீண்டும் தாயகம் திருப்பி அனுப்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்தியாவில் இருந்து House Maid விசாவில் சிங்கப்பூர் வருபவர்கள் Return Ticket அல்லது அதற்கான பணம் ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts