சிங்கப்பூர் புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்திற்கு காரணமான 65 வயது ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறுப்புகளை சரியாக கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டி பலருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அதிகப்படியானோர் குணமாகி வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஒரு ஒட்டுனருடன் சேர்த்து சிலர் மட்டுமே இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
பேருந்து நிலையத்துற்கு உள்ளே ஒரு பேருந்து நுழையும் போது அதே நேரத்தில் வெளியே வந்த ஒரு பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பேருந்து தடுப்பு சுவர்களை இடித்துக்கொண்டு ஒரு புறமாக கவிழ்ந்தது.
விபத்து நடந்த பேருந்து நிலையத்தில் தற்காப்பு படையை சேர்ந்த 10 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்து பற்றிய தகவல்களை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.