TamilSaaga

உலகளாவிய சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு நல்லவரவேற்பு பெற்றுள்ளது

சர்வதேச சந்தையில் பண பரிமாற்றம் பொதுவாக அமெரிக்க டாலரின் மூலமாகவே நடத்தப்படும். அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடாக கருதப்படுவதால் அவர்களுடைய டாலர் மதிப்பு உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதாவது பண பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மற்றும் நிதி சுழற்சியை மேலும் வலுவடைய செய்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி இன்னும் பல வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய பண மதிப்புகளை உயர்த்தவும் முயற்சி செய்து வருகின்றது. அந்த வகையில் இந்தியா, ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த தேவையான அனைத்து விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது.

தற்போது அமெரிக்காவின் டாலர்கள் மூலமாக உலகில் முக்கால்வாசி பண பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. உலகளாவிய வங்கிகள் இந்த முறையான பணப்பரிமாற்றத்தை ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம் அமெரிக்கா பணம் அச்சிடுவதை அதிகப்படுத்தவும், மற்ற நாடுகளில் இருந்து பெரும் கடன்களையும் அதிகப்படுத்த முடிகிறது.

அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக இந்தியாவின் ரூபாய் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக திகழ்கிறது. இந்திய நாட்டின் பொருளாதார கட்டமைப்பு அண்மை காலங்களில் மிகவும் துல்லியமாக செயல்படுகிறது.

கடந்த மாதம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் கீழே சென்றதால் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை. பொருளாதரத்தில் பெருத்த மாற்றங்கள் ஏற்படவும் அந்நிய செலாவணி உயரவும் இது வழி வகுக்கலாம். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாதிப்பை அனுபவிக்க நேரலாம். ஆனால் இந்தியா அதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாக நீக்குவதற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் UAE உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா, கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பணப் பரிமாற்றம் இந்திய ரூபாயிலே நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. பொதுவாக உலகளவில் சந்தை கச்சா எண்ணெய் சார்ந்து இருக்கிறது எனவே இந்தியாவின் இந்த வியூகம் நல்ல பலனை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

UAE மட்டுமின்றி ரஷ்யாவிடம் பெறும் என்னை இறக்குமதிக்கும் இந்திய ரூபாயை சார்ந்து இருக்க வேண்டும் என கையெழுத்திட்டு உள்ளது. இந்தியா மொத்தம் 39 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இவை அனைத்திலும் இந்திய ரூபாயின் மூலம் பண பரிவர்த்தனை நடக்குமாயின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கலாம். கச்சா எண்ணெயை தவிர, பெரும்பாலான இந்தியர்களின் விடுமுறை கொண்டாட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் நாடு தாய்லாந்து என்பதால் தாய்லாந்தில் நடக்கும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் இந்திய ரூபாயை சார்ந்ததாக இருக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு மட்டுமல்லாமல் RBI உடன் இணைந்து இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

RBI, 18 நாடுகளில் இருக்கும் வங்கிகளுக்கு Special Vostro Rupee Accounts ஓபன் செய்வதன் மூலம் இந்திய ரூபாயின் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இதுபோன்ற சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வதால் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது, இதன் காரணமாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற செயல்களால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரலாம் ஆனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இதனால் என்ன பயன்?

ஆம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் பெறும் பயனடைய முடியும். ஆனால் இந்தப் பயன்கள் நீண்ட காலத்தை அதாவது லாங் டர்மை சார்ந்தது. இந்திய ரூபாய் வேறு ஒரு நாட்டின் நாணயத்திற்கு மாற்றும் போது அதனுடைய மதிப்பு குறையாமல் இருக்கும். ரூபாய் மதிப்பு அதிகரிப்பதால் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்கள் இந்தியாவில் தங்களுடைய நிறுவனத்தை நிறுவ நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவில் நாணய ஏற்ற இறக்கம் குறைவதால் வெளிநாட்டு மூலதன வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இறக்குமதி செலவை குறைவதால் நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையை நீக்குவதோடு நாட்டின் இருப்பு நிலையை வலுவு படுத்துகிறது. இதன் விளைவு இந்தியாவுக்கு பெருத்த நன்மையை அளிக்கும். இருநாட்டு உடன்படிக்கைகள் நல்ல முறையில் நடைபெறுவதால் நாட்டின் பொருளாதாரம் மெருகேற்றப்பட்டு இந்தியாவின் செல்வாக்கு உலகளாவிய சந்தையில் அதிகரிக்கும். டாலருக்கு நிகராக இந்திய மதிப்பின் அளவுகோலை மெயின்டைன் செய்ய வேண்டும் என்ற ஆர்பிஐயின் அழுத்தத்தை இது குறைக்கும்.

இது மட்டுமின்றி நிலையான மற்றும் திடமான INR உருவாக்க இந்தியாவால் முடியும். இதன் பலனாக இந்தியாவின் பொருட்களை வாங்கும் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் மற்றும் சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கை மேம்படுவதால் இந்திய பொருளாதாரம் உயர்ந்த நிலையை அடையும். பொதுவாக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் ஆனால் இது போன்ற கட்டமைப்புகள் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவும்.

இந்திய பொருளாதாரம் சர்வதேச மயமாக்குவதால் பரிவர்த்தன செலவுகள் குறைவது மட்டுமல்லாமல் இந்திய நிதி சந்தையில் அதாவது நிப்ட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இதன் மூலம் மக்களிடையே பண புழக்கம் அதிகரிக்கும். இவ்வாறு இந்திய ரூபாய் ஸ்திரத்தன்மையை அடைவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வருகை அதிகமாகும்.

இதுபோன்ற வர்த்தக நிகழ்வுகளால் இந்தியாவுக்கு சாதகமாக காற்று வீசுகிறது. உலகளாவிய சந்தையில் இந்தியாவின் மதிப்பு கூடுவதோடு இந்தியாவின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதால் அந்த நாட்டில் இருக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் நன்றாக அமையும். எனவே கூடிய விரைவில் இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை பெற்ற நாடாக திகழும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts