TamilSaaga

சிங்கப்பூரில் வேலை செட்டாகுமா என்ற குழப்பம் இருக்கா? அப்டினா TWP பாஸில் 6 மாதங்கள் வரை இருக்கலாம்… பிடித்தால் மட்டும் டெஸ்ட் அடித்து வேலையை தொடரலாம்

படிச்சிட்டா s-passல போயிடலாம். இல்ல அனுபவம் மட்டும் இருக்கா டெஸ்ட் அடிச்சிட்டு போகலாம் என யோசித்து வைத்திருந்தால் முதலில் இதை படிங்க. சிங்கப்பூர் வாழ்க்கையை பழகி கொள்ள இது ஏதுவாக இருக்கும். அதை தொடர்ந்து நீங்கள் தொடரலாமா? வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இந்த வழிக்கு உறுதுணையாக இருக்கும் பாஸ்களில் ஒன்று தான் TWP.

சிங்கப்பூரில் வேலைக்காக அப்ளே செய்யும் போது பொதுவாக பலருக்கும் பல குழப்பங்கள் உருவாகும். சிலர் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை தேர்வு செய்து விட்டு அதில் சென்று விடலாம் என முடிவே எடுத்து விடுவார்கள். சிலர் பிறரின் யோசனையில் ஒன்றை தேர்வு செய்வார்கள். முதலில் எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கே ஒரு நல்ல முடிவு ஈசியாக கிடைத்துவிடும்.

TWP என்பது Training Work Permit. இந்த பாஸில் சிங்கப்பூருக்கு வர எந்த கல்வி தகுதியும் கேட்கப்படாது. நீங்க பத்தாவது படித்திருந்தாலும், படிக்கவே இல்லை. அனுபவம் மட்டுமே இருக்கிறது என்றாலும் இந்த பாஸ் மூலம் உங்களால் சிங்கப்பூர் வேலைக்கு வர இயலும். இந்த பாஸில் நீங்க சிங்கப்பூர் வந்தால் 6 மாதம் வரை மட்டுமே இருக்க முடியும். இதற்கும் 3 லட்சத்தி 40 ஆயிரம் கட்டணமாக ஏஜென்ட் கேட்பார்கள். இது சிங்கப்பூர் மதிப்பில் $6000 சிங்கப்பூர் டாலராக இருக்கும். 6 மாதம் முடிவதற்குள் கம்பெனி செலவிலேயே நீங்க சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்து கொள்ளலாம். சில கம்பெனி மட்டுமே இதை ஃபாலோ செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் சில ஏஜென்ட்கள் 6 மாதம் மட்டுமே போதும் எனக் கூறி சிங்கப்பூரில் உங்களுக்கு வேலையை தேடிக்கொடுத்தால் இவ்வளவு பெரிய தொகை கேட்கப்படாது. இதை விட குறையும். ஆனால் சிங்கப்பூரில் உங்களால் டெஸ்ட் அடிக்கமுடியாது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 10 நாட்களுக்குள் வேலைக்கு வர வாய்ப்பு தரும் TEP… ஆனா 3 மாதத்திற்குள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டுமாம்… என்ன சம்பளம் கிடைக்கும்?

$20 முதல் $22 சிங்கப்பூர் டாலர் தின சம்பளமாக கிடைக்கும். நீங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கும் பிடித்தம் செய்து விடுவார்கள். இதிலும் ஓவர் டைம் கூட இருக்கும். சிலருக்கு சிங்கப்பூர் வாழ்க்கை செட்டாகி இருக்கும். ஆனால் டெஸ்ட் அடிக்க வரும்போது காசு கட்டி இருக்க மாட்டீர்கள். அதனால் கம்பெனி உங்களை டெஸ்ட்டுக்கு அனுப்ப இயலாது. அதற்காக கவலையேபட வேண்டாம். விசா இருக்கும் 6 மாதத்திற்குள் வேலைக்கு செய்து கொண்டே சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்து கொள்ளலாம். நீங்கள் வேலை செய்த கம்பெனியில் கோட்டா இருந்தால் வொர்க் பெர்மிட்டுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறைகளில் இது சாத்தியமில்லை. வேறு கம்பெனியிலும் உங்களுக்கு வேலை கிடைத்து விடும். ஆனால் தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதை விட சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது எளிதாகவே இருக்கும் என்பது இதில் மிகப்பெரிய ப்ளஸாக பார்க்கப்படுகிறது.

TWPல் சிங்கப்பூர் வந்தால் உங்களுக்கு இருக்கும் 6 மாதத்தினை சரியாக பயன்படுத்தி கொள்ள பாருங்கள். test அடித்து சிங்கையிலேயே வாழ்க்கையை தொடர நினைப்பவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும் என்பதில் மாற்றமே இல்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts