TamilSaaga

சிங்கப்பூரில் வேலை தேடி tourist visaவில் வரப்போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு அப்புறம் முடிவு பண்ணுங்க… மாற்றம் வரலாம்

சிங்கப்பூரில் வேலை தேடுவதற்கு சில அங்கீகரிக்கப்பட்ட முறைகள் இருந்தாலும் ஒரு சிலர் குறுக்கு வழிகளில் வேலை தேடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் பாஸ்களுக்கு பெரிய லட்சத்தில் செலவு செய்து வருபவர்கள் தைரியமாக வந்து விடுகிறார்கள். ஆனால் வேலைக்காக சிலர் டூரிஸ்ட் விசாவில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் சிலருக்கு வேலை கிடைத்தாலும் கண்டிப்பாக இதை நீங்கள் செய்யவே கூடாது. இதனால் நீங்கள் என்ன விதமான பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்பது குறித்து இந்த பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் வேலைக்காக tourist விசாவில் சென்று வேலை தேடிக்கொண்டு அப்படியே வொர்க் விசாவில் மாறிவிடலாம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. சரி இப்படி யோசித்து பாருங்கள் உங்களுக்கு சிங்கப்பூருக்கான Tourist visa எடுக்க இந்தியாவில் 3000 ரூபாயிற்குள் செலவுகள் இருக்கும். அடுத்து சிங்கப்பூர் செல்வதற்கான விமான டிக்கெட் இது குறைந்தது 25000 ரூபாய் வரை செலவாகும். அடுத்து, சிங்கப்பூர் வந்தவுடன் நீங்கள் ஒரு நல்ல இடத்தில் தங்க வேண்டும். இதில் சிலருக்கு இங்கு உறவினர்கள் இருந்தால் தப்பித்தீர்கள் இல்லையா ஒரு ஹாஸ்டலாவது பார்க்க வேண்டும். அதற்கு 30 நாட்களுக்கு $600 சிங்கப்பூர் டாலர் செலவாகும். இது இந்திய மதிப்பில் கணக்கிடும் போது 36000 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

சாப்பிடுவதற்கு அதிகபட்சமாக $300 சிங்கப்பூர் டாலர் செலவாகும். இது இந்திய மதிப்பில் 18000 ஆயிரம் ரூபாயாக இருக்கும். அடுத்து உங்களின் மொபைல், போக்குவரத்து மற்றும் சில செலவுகளுக்கு சேர்த்து $50 சிங்கப்பூர் டாலர் செலவாகும். இது இந்திய மதிப்பில் 3000 ரூபாயாக கணக்கிடப்படுகிறது. சிங்கப்பூரில் மருத்துவம் ரொம்ப காஸ்ட்லி என்பதால் கண்டிப்பாக $100 ரூபாயிற்கு இன்சுரன்ஸ் எடுத்து விடுங்கள். இந்த செலவுகள் எல்லாம் சேர்த்தால் ஏறத்தாழ ஒரு லட்சத்தினை நெருங்கி விட்டது.

வேலைக்காக பல கம்பெனிகள் ஏறி இறங்க வேண்டும். இதில் சில நிறுவனங்கள் இரண்டு அல்லது மூன்று கட்டமாக நேர்காணல் நடத்துவார்கள். உங்கள் அதிர்ஷ்டத்தில் முதல் கம்பெனி ஓகேயானால் கூட அவர்கள் உங்களுக்காக IPA அப்ளே செய்ய வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட 2 வாரங்கள் எடுக்கும். அது வந்தால் மட்டுமே உங்களால் 30 நாட்களை தாண்டி சிங்கப்பூரில் தங்க முடியும். இல்லாத பட்சத்தில் நீங்கள் வேலையில் தேர்வானால் கூட IPA வாராத பட்சத்தில் நாட்டினை விட்டு வெளியேற நேரிடும். இது முதல் கம்பெனி ஓகேயானால் மட்டுமே, இரண்டு அல்லது மூன்று கம்பெனி என நீண்டால் யோசித்து பாருங்கள். வேலை கிடைக்காமல் ஒரு லட்சம் செலவு மட்டுமே ஆகி இருக்கும்.

நேரில் பார்க்கும் உங்களுக்கு எந்த நிறுவனமும் முன்னுரிமை கொடுக்கும் என நினைக்காதீர்கள். அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் எல்லாருமே ஒரே தராசில் தான் இருப்பார்கள். இந்த வேலை தேடும் படலத்தினை உங்க சொந்த நாட்டில் இருந்து செய்யுங்கள். அதற்காக பல வேலைவாய்ப்பு தளங்கள் கூட இருக்கிறது. இந்த செலவுக்கு பதில் இன்னும் 1 லட்சம் கூட போட்டாலே PCM permitல் சிங்கப்பூர் வந்துவிடலாம். செலவு ஒருபுறம் என்றால் இதில் உங்களுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் இருக்கிறது. Tourist visaவில் வந்து வேலை தேடும் உங்களை அதிகாரிகள் பிடித்தால் உடனே நாட்டினை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts