அண்டை நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்று நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் “ஒரு இனிமையான சந்திப்பை” மேற்கொண்டார், இந்த சந்திப்பின்போது அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளின் குறித்து பல விஷயங்களை பற்றி பேசினார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது. இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள மோடி, ஜி20 மாநாட்டின் போது பிரதமர் லீயை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி20 மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி மற்றும் நமது பிரதமர் லீ தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இத்தாலி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் நிதியமைச்சர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று பல விஷயங்களை பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நமது நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தனது முகநூலில் பதிவிட்டவை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “இந்த G20 இத்தாலி சந்திப்புகளுக்காக ரோம் நகரின் MOF குழுவுடன், எனது இந்தோனேசிய மற்றும் இந்திய சகாக்களான ஸ்ரீ முல்யானி இந்திராவதி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து பொருளாதாரக் கண்ணோட்டம் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். மேலும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளை ஆராய்வதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.”
இந்தியாவின் வர்த்தக அமைச்சரும் ஜி-20 ஷெர்பாவுமான பியூஷ் கோயலையும் சந்தித்து உரையாடினேன். புருனேயின் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் II டத்தோ அமின் லியூவையும், நெதர்லாந்து நிதி அமைச்சர் வோப்கே ஹோக்ஸ்ட்ரா அவர்களையும் நான் சந்தித்தேன் என்றார்.