TamilSaaga

“யாரோ செய்த தவறு” : சிங்கப்பூரில் தர்பூசணியால் ஏற்பட்ட சோகம் : என்னோட வருமானமே போச்சு, புலம்பும் ஓட்டுநர்!

சிங்கப்பூரில் வாங் வெய் ஜியான் என்ற ஒரு தனியார் வாடகை வாகனம் (PHV) ஓட்டுநர், ஜூரோங்கில் உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகக் கூறப்படும் தர்பூசணி பழம் தனது காரை சேதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தனது அவரது கார் சேதமடைந்துள்ளதாகவும் காரைப் பழுதுபார்ப்பதற்காக S$1,000-க்கும் அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. .

ஓட்டுநர் வாங்கின் கூற்றுப்படி, கடந்த பிப்ரவரி 25 அன்று காலை 9.24 மணியளவில், ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93 வழியாக, அவர் Blk 966-லிருந்து Blk 967Bக்கு தனது காரை ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் ஒரு மூலையைத் காரை திருப்பிய சில நொடிகளில் கார் மீது தர்பூசணி பழம் வந்து விழுந்தது. காரின் கண்ணாடிகளை விரிச்சலடைய செய்த அந்த தர்பூசணியின் தாக்கத்தை நம்மால் அந்த புகைப்படத்தில் காணமுடிந்தது.

Breaking : 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் துவங்கிய சிங்கப்பூர் – மதுரை நேரடி விமான சேவை – வாரம்தோறும் 4 விமானங்கள்! Exclusive Update

தனது தந்தை அதிர்ச்சியில் காரை நிறுத்தி, வெளியே வந்து பின்னர் காவல்துறையை அழைத்ததாக வாங்கின் மகன் கூறினார். அந்த பகுதியில் உள்ள Blk 967Bன் குடியிருப்பாளரால் தர்பூசணி வீசப்பட்டதாக வாங் கூறியுள்ளார், இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த தர்பூசணி பழம் காரின் மீது மோதிய தருணத்தையும் அது வீசப்பட்ட தோராயமான திசையையும் மட்டுமே கேமராவால் படம்பிடிக்க முடிந்தது என்றும் ஓட்டுநரின் மகன் கூறினார்.

அவரது புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குடியிருப்பாளர்களை விசாரிக்க மாடிக்கு சென்றனர் மற்றும் காரில் எஞ்சியிருந்த பழங்களின் மீதத்திலிருந்த்து ஆதாரங்களை எடுத்துக் கொண்டனர். ஷின் மின் டெய்லி நியூஸ் மேலும் கூறுகையில், கண்ணாடியின் விரிசல்களின் அடிப்படையில் பழங்கள் உயரமான இடத்தில் இருந்து வீசப்பட்டதாக போலீசார் நம்புகிறார்கள் என்று தெரிவித்தது. பொறுப்பற்ற இந்த செயல் குறித்து விசாரணையை தொடங்கியதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“இந்திய நடனக்கலையில் முன்னோடி” : சிங்கப்பூரின் கலைச் சின்னம் – நடன ஆசிரியர் சாந்தா பாஸ்கர் காலமானார்

இதற்கிடையில், ஒரு நாளைக்கு சராசரியாக S$150 வரை சம்பாதிக்கும் வாங், தனது கார் பழுதுபார்க்கப்பட்டு வரும்வரை வீட்டில் ஓய்வெடுக்கத்தான் வேண்டும் என்று சோகத்துடன் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts