TamilSaaga

கடும் வெள்ளம்.. “18 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த மலேசியர்கள்” – உணவளித்து காத்த “ரியல் ஹீரோக்கள்”

மலேசியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை, வெள்ளம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார், மேலும் 8 பேரை காணவில்லை என்று காவல்துறை தலைவர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். பல இடங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கின்றது, மேலும் சாலைகளுக்கு சில இடங்களில் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்கள் வந்து போகும், ஆனாலும் அன்பான குடிமக்களின் உதவியால், எந்த தடையையும் நம்மால் வெல்ல முடியும் என்று தோன்றுகிறது. கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18), டிக்டாக் செயலி பயனர் நிரோஷினி மணிக்குமார் என்பவர், மலேசியாவில் பெரிய வெள்ளத்தால் ஏற்பட்ட 18 மணிநேர போக்குவரத்து நெரிசலின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த நீண்ட போக்குவரத்து நெரிசலின் போது, ​​சிக்கிக் கொண்ட ஓட்டுநர், பசியால் வாடும் பிற ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு நெடுஞ்சாலையில் உணவை விநியோகித்து ஒருவருக்கொருவர் உதவினார்கள் என்று அவர் கூறினார்.

இந்த மனதைக் கவரும் சம்பவத்தைப் பற்றி நாம் அறிந்தவை இங்கே, திருமதி மாணிக்குமார், முதலில் பதிவிட்டது இதோ “ஒரு அருமையான சில்லென்று காலைப்பகுதியில் தொடங்கிற்று, என்று அந்த ஒப்பனை கலைஞரும் அவரது பெண் தோழி ஒருவரும் சிலாங்கூர் பகுதிக்கு ஒரு ஒப்பனை முன்பதிவிற்காக சென்றனர்”. அந்த இருவரும் நெடுஞ்சாலையை அடைந்த உடனேயே ஏற்கனவே வெள்ளமென தேங்கியிருந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். காரணம் அதற்கு மேற்கொண்டு அந்த போக்குவரத்து நெரிசல் நகரவே இல்லை என்றே கூறலாம். ஓட்டுநர்கள் சிலர் அவருடைய வாகனங்களை விட்டுவிட்டு வெளியில் காத்திருந்ததையும் காணமுடிந்தது என்று திருமதி மாணிக்குமார்.

அங்கு நின்று கொண்டிருந்த சில லாரி டிரைவர்களிடம் பேசுகையில் தங்களுக்கு முன்னால் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்றும் இதனால் கடந்த சில மணி நேரங்களாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது என்பதையும் கேட்டறிந்தார். சில மணி நேரங்கள் காரிலேயே காத்திருந்த நிலையில் சிலருக்கு பசி எடுக்க ஆரம்பித்தது அந்நேரத்தில் ஒருவர் தனது வண்டியின் பின்புறத்தில் இருந்த நொறுக்குத்தீனிகளை எடுத்து அருகில் இருந்தவர்களுக்கு கொடுக்கத் தொடங்கினார்.

கூட்ட நெரிசலில் சிக்கி வாகனங்கள் நகராமல் சுமார் 6 மணி நேரம் கடந்த நிலையில் ஒரு சாப்பாட்டு வண்டியும் அந்த இடத்திற்கு வந்து இலவசமாக உணவுகளை வழங்க தொடங்கினார்கள். ஒரு தூய்மையான மனிதன் செய்கின்ற ஒரு மிகச்சிறிய உதவி தக்க சமயத்தில் உதவுவது அதிபெறும் மகிழ்ச்சி அளித்ததாக மாணிக்குமார் கூறினார். நானும் தனியே எனது காரில் சிக்கிக்கொள்ளாமல் எனது தோழியோடு இருந்தது எனக்கு மிகவும் பலமாக இருந்தது என்றார்.

கடந்த டிசம்பர் 18 சனிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் இருந்து இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் சுமார் 18 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அந்த சுங்கச்சாவடியில் தேங்கியிருந்த நீர் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து மெல்லமெல்ல தொடங்கியது. அடுத்த நாள் காலை 7. 15 மணி அளவில் அந்த இடத்தை விட்டு அனைவரும் நகரத் தொடங்கினார். இந்த கடுமையான சூழலில் உடனடியாக முன்வந்து உதவிய அனைத்து பொது மக்களுக்கும் மலேசியர்களுக்கும் இந்த நேரத்தில் மிகவும் கடமைப் பட்டவர் உணர்வதாக அவர் கூறினார்.

Related posts