TamilSaaga

“சிங்கப்பூரை ரொம்ப மிஸ் பன்றிங்களா?” : இந்தியர்களுக்கு Scoot வெளியிட்ட செய்தி – முழு விவரம்

சிங்கப்பூர் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படும் Scoot விமான சேவை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் “நவம்பர் 29 முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) அறிவிப்புடன், இந்த இரு நாடுகளுக்கு இடையே அதிக விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் – மேலும் இதன் விளைவாக நாங்கள் உங்களை சிங்கப்பூர் கொண்டுள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள் : திருச்சி : டிசம்பர் முதல் மார்ச் 2022 வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக்கிங் தொடக்கம்

சிங்கப்பூர் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கிடையே விமானப் பயண ஏற்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால், கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் நாங்கள் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். காத்திருங்கள்!. என்று கூறி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் மற்றும் இருமார்கமாக செல்லவிருக்கும் பயணிகளுக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

மேலும் வரும் 29ம் தேதி முதல் சிங்கப்பூர் தனது VTL சேவைகளை இந்தியாவிற்கு திறக்கவுள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது. இந்த சேவை தொடங்கப்பட்டது இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி சிங்கப்பூருக்குள் நுழைய வழிபிறக்கும் என்று பலரின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் நேற்று மீண்டும் இந்தியா திரும்பினார்.

Related posts