இந்தியாவில் நிலவும் அரிசி தட்டுப்பாடின் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் உலக அளவில் உள்ள தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தமிழர்களின் பிரதான உணவு அரிசி எனும் பொழுது அதை தவிர்த்து வேறு எந்த உணவுப் பொருளையும் நம் நாட்டு மக்களால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அரிசியானது பொதுவாக கிடைக்கும் என்ற தைரியத்தில் தான் தமிழர்கள் உலகெங்கும் சென்று குடியேற காரணம்.
ஆனால் இந்தியாவில் நிலவும் அரிசி பற்றாக்குறை காரணமாக பாஸ்மதி அல்லாத மற்ற பொன்னி அரிசி முதலான அரிசி வகைகளுக்கு தடை விதித்தது. இதனால் உலக சந்தையில் அரிசியின் விழுக்காடு 20% குறைந்தது. மேலும் அரிசியின் விலை ஆனது 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டது. எனவே, வியட்நாமிலிருந்து அரிசி வரவழைக்கப்படலாம் என்ற யோசனையில் நாடுகள் உள்ளதால், வியட்நாம் அரிசியில் விலை உயர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வியட்நாம் அரிசியை இறக்குமதி செய்வதற்காக சாதாரணமாக விற்கப்படும் மதிப்பினை 40 மில்லியன் டாலர்கள் அதிகமாக கொடுத்து வாங்க உலக நாடுகள் தயாராக உள்ளன. எனவே வியட்நாமில் அரிசி ஏற்றுமதி விளையாடுது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவினை போன்று அரிசி ஏற்றுமதியை செய்யும் தாய்லாந்தும் தற்பொழுது அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
எனவே ஏறிவரும் அரிசியின் விலையால் வரும் ஆண்டுகளில் பணம் வீக்கத்தின் மதிப்பு மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வியட்நாம் அரிசியின் விலை உயரலாம் என்பதால் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் அரிசியினை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது.