தொற்றுநோயால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மலேசியாவில் பிறந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தை விட்டு 735 நாட்களைக் தனியாக சிங்கப்பூரில் கழித்த நிலையில் அவர் தற்போது இறுதியாக வீடு திரும்பியுள்ளார். சிங்கப்பூரில் பணிபுரியும் Wu Xiao Hui, தான் மீண்டும் தனது குடும்பத்தை சந்திக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த அவர் டிக்கெட் எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், சீனப் புத்தாண்டுக்கு வீடு திரும்பப் போவதில்லை என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு கவலையோடு சிங்கப்பூரில் இருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, பேருந்து டிக்கெட்டுகள் ஓபன் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் முடிவடைந்தன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. எவ்வாறாயினும், வூ, பின்னர் வீட்டிற்கு செல்ல ஒரு பேருந்து டிக்கெட்டைப் பெற முடிந்தது, ஆனால் இந்த முறை அவரது பெற்றோரை ஆச்சரியப்படுத்த தனக்கு டிக்கெட் கிடைத்த விஷயத்தை அவர் யாரிடமும் கூறவில்லை. சீனப் புத்தாண்டின் ஐந்தாவது நாளான பிப்ரவரி 5 அன்று குயின் ஸ்ட்ரீட் பஸ் டெர்மினலில் இருந்து தனது பயணத்தைத் மலேசியா நோக்கி தொடங்கினார். வீட்டிற்கு வந்ததும், மாஸ்க் மற்றும் வெள்ளை நிற தொப்பி அணிந்து சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த தனது தாயிடம் நான் உங்களது மகனின் புதிய காதலி என்று கூறியுள்ளார்.
மகளை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அவர், திகைப்புற்று நிற்க அப்போது அங்கு வந்த அவருடைய தந்தை கணநேரத்தில் அவரை அடையாளம் கண்டு ஆரத்தழுவிக்கொண்டார். அப்போது யாரென்று அறியாமல் திகைப்புற்று நின்ற தாயிடம் தொப்பியையும் முகமூடியையும் எடுத்து காட்ட, ஆனந்த கண்ணீரில் தாய் அழுதபடி அவரை அணைத்துக்கொண்டார்.
மகிழ்ச்சியான இந்த வீடியோ பேஸ்புக்கில் 48,000க்கும் மேற்பட்ட லைக் மற்றும் heartகளைப் பெற்றுள்ளது மற்றும் 12,000 முறை பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு பிறகு சைனா பிரஸ்ஸிடம் பேசிய வூ, அந்த தருணம் கசப்பானதாக இருந்தது, ஏனெனில் தனது பெற்றோர் அழுவதைக் கண்டு மனம் உடைந்ததாகவும், இன்னும் இரண்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். அந்த வீடியோவைத் திரும்பிப் பார்க்கும்போது தன் குடும்பத்தினருக்கு அந்த நல்ல நினைவுகள் நினைவுக்கு வரும் என்று அவர் நம்பினார்.