TamilSaaga

அந்த பைலட் தான் சார் “Real Hero” : லண்டன் புயலில் தள்ளாடிய Singapore Airlines விமானம் – சாதுர்யமாக செயல்பட்ட விமானி, Viral Video

லண்டன் நாட்டை Eunice என்ற புயல் பயங்கரமாக தாக்கி வருகின்றது, இதுவரை இல்லாத அளவில் உயிருக்கான ஆபத்தான வானிலை நிலவுவதாக அப்பகுதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த Eunice புயல் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஐரோப்பாவில் குறைந்தது 8 பேரைக் பலிவாங்கியுள்ளது என்றே கூறலாம். பிரிட்டனை வரலாறு காணாத புயல் தாக்க மேற்கு ஐரோப்பா முழுவதும் விமானங்கள், ரயில்கள் மற்றும் படகு பயணங்கள் சீர்குலைந்து மில்லியன் கணக்கான மக்கள் மீட்பு பகுதிகளில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் உரிமம் பெறாத KTV-கான்செப்ட் நிறுவனம்” : 4 வெளிநாட்டு பெண்கள் உள்பட 97 பேரிடம் விசாரணை – என்னவெல்லாம் அங்கு நடந்தது தெரியுமா?

அதே போல் லண்டனில், தெற்கு இங்கிலாந்து, சவுத் வேல்ஸ் மற்றும் நெதர்லாந்து முழுவதும் மிக உயர்ந்த வானிலை எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கி கிடைக்கிறது. கடற்கரையோரங்களில் சுவர்களை மீறி அலைகள் உயர்வதை காணமுடிந்தது.

இதுஒருபுரம் இருக்க லண்டன் நகரில் உள்ள Heathrow விமான நிலையத்திற்கு கடும் புயலில் தத்தளித்து விமானியின் சாமர்த்தியத்தால் நல்லபடையாக தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உளப்பட சில விமானங்களின் வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று வருகின்றது. காண்போரை விழிவிரிய வைக்கும் இந்த நிகழ்வு, Dyer’s Big Jet TV என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டு 6.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. ஒரு உள்ளூர் வானொலியில் பேசி அந்த youtube சேனல் உரிமையாளர் இப்போது, ​​70mph (112.6km/h) வேகத்தில் வீசும் காற்றுடன் கூடிய இந்த நிலைமைகள் மிகவும் தீவிரமாக உள்ளன. இந்த சூழலில் அந்த விமானியின் திறமையைத்தான் தான் போற்றவேண்டும் என்றார்.

Singapore Airlines Video – Video Courtesy Big Jet Tv youtube channel

“குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு 1,40,000 ART கிட்கள்” : சிங்கப்பூரின் மகத்தனத் திட்டத்தில் இதுவும் ஒன்று – எங்கு பெற்றுக்கொள்ளலாம்?

டயரின் சமீபத்திய வீடியோ, நேற்று பிப்ரவரி 18 அன்று நேரலையில் ஒளிபரப்பப்பட்டது, அதில் பல சிங்கப்பூர் ஏர்லைன் விமானங்கள் சாதுர்யமாக விமான நிலையத்தில் இறங்கியதை காணமுடிந்தது. விமானங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட Dyer, பிரத்தியேக வாகனம் ஒன்றில் இருந்து விமானங்கள் இதுபோன்ற கடினமான வானிலை நிலவும் நேரங்களில் தரையிறங்குவதை படன்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts