சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் மக்கள் தங்கள் வீடுகளில் ஆங்கிலத்தினை அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆங்கிலம் பேசும் சதவிகிதம் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் 2010ஆம் ஆண்டில் 32.3 சதவிகிதமாக இருந்த ஆங்கில பயன்பாடு தற்போது 2020ஆம் ஆண்டில் 48.3 சதவிகிதமாக அதிகரித்து காணப்படுகிறது. ஆங்கிலத்தை போல தங்களது தாய் மொழியையும் இங்கு வசிக்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவிலும் இதே போல் ஆங்கிலத்தின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் பெரும்பாலும் தமிழ் அல்லது மற்ற இந்திய மொழிகளை வீடுகளில் பேசினாலும், 2010 ஆம் ஆண்டு 41.6 சதவிகிதமாக இருந்த ஆங்கிலத்தின் பயன்பாடு தற்போது 2020ல் 59.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கல்வியறிவு சதவீதம் உயர்வு
சிங்கப்பூரை பொறுத்தவரை இங்கு வசிக்கும் மக்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் கல்வி பெறுபவர்களின் சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 97.1 சதவிகிதம் என்ற அளவில் கல்வியறிவு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு சிங்கப்பூரின் 3 முக்கிய இனங்களிலும் காணப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.
இந்தியாவில் மாநில வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில் கல்வியறிவு பெற்றவர்கள் 77.7 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறார்கள்.