TamilSaaga

Jewel changi மற்றும் Sentosa -வை மலிவான டிக்கெட் விலையில் சுற்றி பார்க்கணுமா?… அப்போ இந்த தகவல்களை கண்டிப்பாக படிங்க!

சிங்கப்பூரின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் Jewel Changi மற்றும் Sentosa மிகவும் பிரபலமானவை. இந்த இரண்டு இடங்களிலும் சுற்றி பார்த்து ரசித்திட பல அழகான விஷயங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. Jewel changi இல் உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சியான Rain Vortex, walking net, Mirror maze, Bouncing Net, Canopy Bridge போன்ற பல்வேறு இடங்களைக் கண்டு மகிழலாம்.

அதேபோன்று Sentosa தீவிலும் கண்டு களித்திட பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இவற்றைக் கண்டு மகிழ்ந்திட பார்வையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிக்கெட் வாங்கி கொள்ள வேண்டும். பெரும்பாலும் இந்த டிக்கெட்களுக்காக கணிசமான தொகையை செலவு செய்தால் மட்டுமே அனைத்து இடங்களையும் காண முடியும்.

இருப்பினும் அனைத்து இடங்களையும் சற்று மலிவான விலையில் சென்று ரசித்திட மற்றொரு வழியும் உள்ளது. அது சிங்கப்பூரின் NTUC ( National Trade Union Congress) எனப்படும் Union இல் உறுப்பினர் ஆவதாகும். இந்த membership card மூலமாக பல சலுகைகளை பெற முடியும்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) என்பது தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பாகும், அத்துடன் சிங்கப்பூரில் உள்ள அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழில்முறை சங்கங்கள் மற்றும் கூட்டாளர்களின் வலையமைப்பாகும்.

NTUC Membership card மூலமாக Jewel Changiல் கிடைக்கும் சலுகைகள்

சிங்கப்பூர் வாழ் மக்களுக்காக, Jewel Changi ன் தனிநபர்களுக்கான கேளிக்கைகளில் 10% off தரப்படுகிறது.

இதில் Canopy park மற்றும் Bundle Deals அடங்காது.

சிங்கப்பூர் வாழ் மக்களுக்காக, Jewel-rassic Quest இல் 25% off தரப்படுகிறது.

NTUC Membership card மூலமாக Sentosa ல் கிடைக்கும் சலுகைகள்

35% off Cable Car Sky Pass (Round Trip)

35% off Sentosa Island Bus Tour

$3 off SkyHelix Sentosa

25% off Wings of Time

20% off Air Combat

35% off Cable Car Sky Pass (Round Trip)

இதில் ஒரு நாளுக்கு Mount Faber Line மற்றும் Sentosa Line க்கு unlimited rides செல்லலாம்.

35% off Sentosa Island Bus Tour

2-hours guided tour

Tour timings: 10AM, 12PM, 2PM, and 4PM

பயணத்திட்டம் மாறுதளுக்கு உட்பட்டது.

முதலில் வருபவர்களுக்கு பயணத்தில் முன்னுரிமை தரப்படும்.

25% off Wings of Time

Wings of Time Show Duration: 20 minutes

Wings of Time Showtimes: 7:40PM & 8:40PM daily

பார்வையாளர்கள் சுற்றுலா தளத்திற்கு வருவதற்கு முன்கூட்டியே online இல் ticket book செய்திருக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு இருக்கை அளிப்பதில் (seat) முன்னுரிமை தரப்படும்.

$3 off SkyHelix Sentosa

இதில் SkyHelix ride மற்றும் ஒரு விருப்ப பானம் அல்லது நினைவுப்பரிசு அடங்கும்.

இதில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் 1.05m விட உயரம் இருக்க வேண்டும்.மேலும் 1.05m to 1.20m உயரம் இருப்பவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உடையவர்கள் கண்டிப்பாக பெரியவர்களுடன் மட்டுமே செல்ல முடியும்.

பார்வையாளர்கள் சுற்றுலா தளத்திற்கு வருவதற்கு முன்கூட்டியே online இல் ticket book செய்திருக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு இருக்கை அளிப்பதில் (seat) முன்னுரிமை தரப்படும்.

20% off Air Combat

இந்த Air Combat VR அனுபவத்தை பெற்றிட பார்வையாளர்கள் கண்டிப்பாக 12 வயது உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

இதில் பார்வையாளர்கள் சுற்றுலா தளத்தின் நடைமுறை வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ள முடியும்.

Terms& Conditions

இந்த சலுகைகள் மார்ச் 31 2024 வரை வாங்குவதற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

NTUC யூனியன் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆன்லைன் மற்றும் கவுண்டரில் வாங்குவதற்கு செல்லுபடியாகும்.

ஆன்லைனில் வாங்கிய டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள்.

ஒரு பரிவர்த்தனையில் வாங்கிய அனைத்து டிக்கெட்டுகளும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட வேண்டும், பகுதியளவு பயன்பாடு அனுமதிக்கப்படாது.

Booking செய்யப்பட்ட டிக்கெட்டுகள் Booking செய்யப்பட்ட நாளில் பயன்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து Book செய்யப்பட்ட மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட transactions, டிக்கெட்களை எந்த சூழ்நிலையிலும் ரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ அல்லது திருத்தவோ முடியாது.

இதர NTUC membership சலுகைகள்

Downtown East இல் உள்ள D’Resort Hotel இல் Room booking மற்றும் BBQ pits, Car parking இல் Unlimited சலுகை தரப்படுகிறது.

Downtown East இல் உள்ள WildWetWet water theme park இல் 30% சலுகை தரப்படுகிறது. ஒரு adult ticket இல் $10.50 சேமிக்க முடியும்.

Uplay.com.sg வழியாக விளையாடும் NTUC members கள் சிறப்பு சலுகைகள் பெற முடியும்.

NTUC Fairprice மளிகையில் 4% off பெற முடியும்.இதன் மூலமாக ஆண்டிற்கு $240 Linkpoints சேகரிக்க முடியும்.

இது மட்டுமில்லாமல், NTUC member ship card க்கு விண்ணப்பிக்கும்போதே $20 மதிப்பான Fairprice Group E- voucher பெறமுடியும்.

Jewel changi, Sentosa போன்ற சிங்கப்பூரின் சிறப்பான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தளங்களை குடும்பத்துடன் இது போன்ற சலுகை விலையில் சுற்றி பார்க்கும்போது செலவுடன் சேர்த்து பல நல்ல மகிழிச்சியான நினைவுகளையும் சேமிக்கலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts