TamilSaaga

“சிங்கப்பூர் Upper Serangoon சாலையில் விபத்து” : தலைகுப்புற கவிழ்ந்த கார், மருத்துவமனையில் சிறுவன் – வீடியோ உள்ளே

சிங்கப்பூரில் ஒரு MPV ரக கார் ஒன்று மற்றொரு காருடன் மோதிய விபத்தில் 11 வயது சிறுவன் உள்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் அப்பர் செராங்கூன் சாலை மற்றும் பார்ட்லி சாலை சந்திப்பில் மாலை 4.14 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “முதல் 30 நாட்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகள் இன்னும் உள்ளன”

அந்த MPV ரக காரில் இருந்த 46 வயதான ஆண் ஓட்டுநர் சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான மற்றொரு காரில் இருந்த சிறுவன் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

கார் தலைகுப்புற விழுந்த காணொளி – Video Courtesy SG Road Vigilante FB Page

SG Road Vigilante என்ற முகநூல் பதிவில் அந்த கார் தலைகுப்புற கிடக்கும் வீடியோ வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

அந்த காணொளியில் Toyota நிறுவனத்தின் அந்த MPV கார் தலைகுப்புற கிடப்பதும், மற்றொரு பென்ஸ் மாடல் கார் முன் பாகம் நொறுங்கி சாலையில் கிடப்பதையும் பார்க்கமுடிகிறது. இந்த விபத்து குறித்து தற்போது வழக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகின்றது என்று தகவல் தெரிவிக்கின்றது.

Related posts