TamilSaaga

“முதல் 30 நாட்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகள் இன்னும் உள்ளன” : சிங்கப்பூர் MTI விளக்கம்

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே வரவிருக்கும் நில தடுப்பூசி பயணப் பாதையில் (VTL) முதல் 30 நாட்களுக்குப் பயணத்திற்கான பேருந்து டிக்கெட்டுகள் இன்னும் புக்கிங் செய்யப்படும் நிலையில் உள்ளன என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 25) இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது ஆறுதல் செய்தியாக உள்ளது. கடந்த வியாழன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் போது பயணிகள் நீண்ட காத்திருப்பு மற்றும் டிக்கெட் சிக்கல்களை சந்தித்த பிறகு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் – தமிழகம்” : பல மடங்கு உயர்ந்துள்ளதா விமான கட்டணம்?

முன்னதாக காலை, டிரான்ஸ்டார் டிராவல் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது, அதில் நில VTL க்கு சேவை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டு பேருந்து நடத்துநர்களில் ஒருவர் – அடுத்த 30 நாட்களுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி அரை மணி நேரத்திற்குள் சுமார் 8.20 மணிக்கு விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறினார். இதனையடுத்து வியாழன் இரவு செய்திக்குறிப்பில், சிங்கப்பூருக்கான டிரான்ஸ்டார் பயண டிக்கெட்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் மலேசியாவிற்கு 70 சதவீத டிக்கெட்டுகள் மாலை 4 மணி நிலவரப்படி இன்னும் உள்ளன என்று MTI தெரிவித்துள்ளது.

மாலை 4 மணி நிலவரப்படி 30 நாள் காலக்கெடுவில் 4,400 நில VTL பேருந்து டிக்கெட்டுகளை டிரான்ஸ்டார் விற்பனை செய்துள்ளதாக MTI தெரிவித்துள்ளது. “மேலும் முக்கால்வாசி டிக்கெட்டுகள் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு பயணிக்க மீதமுள்ளது என்றும் கால் பகுதி டிக்கெட் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பயணங்களுக்கானது” என்று அமைச்சகம் மேலும் கூறியது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மதியம் 3 மணி நிலவரப்படி நில VTL க்கான மொத்தம் 240 தடுப்பூசி பயண பாஸ் (VTP) விண்ணப்பங்களைப் பெற்றதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகியவை “பாதுகாப்பான மற்றும் அளவீடு செய்யப்பட்ட முறையில் VTL நில திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தும்” என்று MTI மேலும் கூறியது. “அனைத்து பயணிகளும் தங்கள் பேருந்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் மற்றும் அவர்கள் நியமிக்கப்பட்ட VTL பேருந்துகளில் ஏறும் முன், தேவையான ஆவணங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அது மேலும் கூறியது.

Related posts