TamilSaaga

சிங்கப்பூரில் உலு பாண்டன் திட்டத்தில் மாற்றம் – நிறுவப்படும் இயற்கை பூங்கா

சிங்கப்பூரில் உலு பாண்டான் வட்டத்திற்கு உட்பட்ட மேம்பாட்டு திட்டங்கள் தற்போது திருத்தம் பெற்றுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இயற்கை ஆர்வலர் குழுக்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள், சுற்றுச்சூழல் தொடர்பாக இந்த இடங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு போன்ற பல தரவுகளை முன்வைத்து.

சில மாற்றங்கள் இந்த பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்த புதிய திட்டத்தின் கீழ் உலு பாண்டான் பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இடத்தை பொது குடியிருப்பு திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. BTO எனப்படும் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் இவ்வாண்டு விற்பனைக்கு விடப்படும் என்று அதிகாரிகள் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருகின்ற ஆண்டின் இரண்டாம் பாதியில் பசுமை நிறைந்த பொது குடியிருப்பு திட்டம் இந்த பகுதியில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஒரு உலு பாண்டான்வின் வட்டாரத்தில் உள்ள இயற்கை பூங்காவின் மேற்குப் பகுதியும் இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

சிங்கப்பூரை பொறுத்தவரை தேவைக்கேற்ப கட்டப்பட்டு விற்கப்படும் வீடுகள் BTO என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள தேவைக்கேற்ப கட்டப்பட்டு விற்கப்படும் வீடுகளில் எண்ணிக்கையானது இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் வீடுகளை விட அதிகமாக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மோண்ட் லீ சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts