TamilSaaga
lovlina-borgohain

கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்… ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் வரபோகுது!

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயின் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்று தரவுள்ளார்.

தனது அறிமுகப் போட்டியிலேயே காலிறுதிக்குத் தகுதி பெற்ற இவர், உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தகக்கது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. உலகமே கண் சாய்க்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த போட்டியில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதியானது.

குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். ஜெர்மனியிலிருந்து முதல் முறையாக ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்ற 35 வயதான ஆப்டெஸ், முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் மற்றும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர். ஆப்டெஸ் தற்போது நரம்பியல் அறிவியல் பிரிவில் முனைவராகப் படித்துக்கொண்டே, குத்துச்சண்டைப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இவரை அறிமுக சுற்றிலே தோற்கடித்து அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறியவர் லோவ்லினா. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

Related posts