TamilSaaga

சுடச்சுட வெளியான Singapore Airshow அறிவிப்பு – முதன் முறையாக சீறிப்பாயும் இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்கள்

சிங்கப்பூர்: இந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர்ஷோவில் (Singapore Airshow) நான்கு விமானப் படைகள் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களின் எட்டு பறக்கும் காட்சிகள் மற்றும் சாகச காட்சிகள் (flypasts) இருக்கும் என்று அதன் அமைப்பாளர் எக்ஸ்பீரியா சார்பில் இன்று (பிப்ரவரி 7) தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15 முதல் 18 வரை சாங்கி கண்காட்சி மையத்தில் இந்த ஏர்ஷோ நடைபெறும். மேலும் இந்த வான்வழி காட்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது.

இதில் இந்திய விமானப்படையின் இலகுரக போர் விமானம் அல்லது தேஜாஸ் விமானங்களும் இடம்பெறும் என்று Experia கூறியுள்ளது. குறிப்பாக, ஜெட் ஒன்று “அட்டகாசமான ஸ்டண்ட் மற்றும் தந்திரங்களை” நிகழ்த்த தயாராகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் விமானப்படை (RSAF) இந்த ஆண்டு இரண்டு சாகசத்தில்-ல் ஈடுபட உள்ளது. இதில் ஒரு ஜோடி AH-64D Apache தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் F-16C போர் விமானம் மூலம் தனி ஏரோபாட்டிக்ஸ் ஆகியவை இடம்பெறும்.

மேலும் படிக்க – “அசத்துங்க”.. சீன அதிபருக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் வாழ்த்து.. அப்படி என்ன செய்யப்போகிறது சீனா?

அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸின் F-35B லைட்னிங் II விமானத்தை சிங்கப்பூர் விமானப்படை வாங்க ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், அதன் சாகசங்களும் இடம் பெற உள்ளது. மேலும், அமெரிக்க விமானப்படையின் B-52 Stratofortress ஒரு fly-by-யில் பங்கேற்க உள்ளது.

தி ஜூபிட்டர்ஸ் என்று அழைக்கப்படும் இந்தோனேசியாவின் ஜூபிடர் ஏரோபாட்டிக் டீம், 2018 ஆம் ஆண்டு ஏர்ஷோவில் பங்கேற்ற பிறகு தற்போது திரும்பி வருகிறது, அவர்களின் ஆறு விமான அமைப்புகளாலும் (six-plane formations) துல்லியமான பறப்பதிலும் பார்வையாளர்களை அதிகம் “சிலிர்க்க” செய்யும்.

Airbus A350-1000 மற்றும் போயிங்கின் wide-bodied விமானமான B777-9 ஆகியவற்றின் டெமோ ஃப்ளைஓவர்களைப் பார்க்க அதிக அளவில் வணிக விமான பார்வையாளர்கள் (Commercial plane watchers) எதிர்பார்க்கலாம்.

இந்த பறக்கும் சாகச காட்சிகள் ஒரு நாளைக்கு ஒரு முறை என்று பிப்ரவரி 15 அன்று மதியம் 12.30 மணிக்கும், பிப் 16 முதல் 18 வரை காலை 11.30 மணிக்கும் நடைபெறும். சிங்கப்பூர் ஏர்ஷோவின் முகநூல் பக்கம் அல்லது இந்த இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக இந்த சாகசங்களை பார்த்து ரசிக்கலாம்.

மேலும் படிக்க – தெலுக் பிளாங்கா ரைஸ் கோர தீ விபத்து.. துளி அச்சமின்றி தீயை அணைத்த வீரமங்கை “கங்காதேவி” – பெருமை கொள்ளும் சிங்கப்பூர்

“எங்கள் பங்குதாரர்கள் மற்றும் கண்காட்சியாளர்களின் இந்த நட்சத்திர நிகழ்ச்சிகள் விண்வெளி மற்றும் விமானத் துறையின் மீட்சிக்கு சான்றாகும், மேலும் இவை பார்வையாளர்களிடையே உற்சாகத்தை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று எக்ஸ்பீரியா நிர்வாக இயக்குனர் லெக் செட் லாம் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஏர்ஷோவை நடத்துவதில் உள்ள சவால்கள் உலகளாவிய பயண சிரமங்களை பிரதிபலிக்கின்றன.

சிங்கப்பூர் ஏர்ஷோவில் ஏர்பஸ், போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முக்கிய தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 360 நிறுவனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன, இது 2020 ஆம் ஆண்டில் 930 ஆக இருந்தது என்று நிகழ்ச்சியின் இணையதளம் தெரிவிக்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts