TamilSaaga

MFA-இல் பெண்கள் அச்சமின்றி சிங்கப்பூர் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள் – அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புகழாரம்

சிங்கப்பூர் அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் தனது சமூக வளைதள பக்கங்களில் ஒரு பதிவினை நேற்று (ஜீன்.25) வெளியிட்டார்.

“சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் (MFA) பெண்களை கொண்டாடுகிறோம். உலகில் எங்கு இருந்தாலும் அச்சமற்ற நம்பிக்கையுடன் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூர் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள்” என பதிவிட்டு அவர்களை கொண்டாடும் விதமாக அந்த காணொளியை வெளியிட்டு இருந்தார்.


அந்த வீடியோ பதிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,

பெண்களின் சாமர்த்தியம் சமூகத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் படைப்பாளர்கள், பாலமாக திகழ்பவர்கள், மாற்றங்களை உண்டாக்குபவர்கள்.

வெளியுறவு அமைச்சகமனாது நேர்த்தியான அறிவாற்றல் மிக்க மற்றும் உறுதியான பெண்களை கொண்டாடுகிறது. அவர்கள் முழுமையான திறனுடன் அச்சமின்றி சேவைகளை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கென தனி விருப்பத்தையும் இடத்தையும் உருவாக்குகிறார்கள்.

இந்த பெண்கள் உலகளாவிய அளவில் தங்களுக்காகவும் சிங்கப்பூர் நாட்டிற்காகவும் நிற்கிறார்கள். இந்த பெண்கள் சாமர்த்தியமும் ஆற்றலும் அறிவுக்கூர்மையும் கொண்டவர்கள் அதனால் அவர்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்கிறார்கள் என்று அந்த வீடியோவில் சொல்லப்பட்டு உள்ளது.

MOH தனது சமூக வளைதள பக்கத்தில், “சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தில் பல குறிப்பிடத்தக்க பெண்கள் தினமும் தைரியத்துடனும் அதிக நம்பிக்கையுடனும் சேவை செய்கிறார்கள். இது உலக ஆரங்கில் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.” என தெரிவித்து அந்த காணொளியை பதிவிட்டு உள்ளது.

Related posts