TamilSaaga
Scoot Airlines

Scootக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒரு ஏர்லைன்ஸ் – சிங்கப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்!

சிங்கப்பூரை அடிப்படையாக கொண்டு இயக்கும் ஒரு Low Cost ஏர்லைன்ஸ் தான் ஸ்கூட் ஏர்லைன்ஸ். சிங்கப்பூர் மக்களை பொறுத்தவரை, அவர்கள் பல நகரங்களுக்கு பட்ஜெட் விலையில் செல்ல பெரிய அளவில் கைகொடுத்து வருகின்றது இந்த Scoot நிறுவனம். இந்த நிலையில் அந்த Scoot நிறுவனத்திற்கே சவால் விடும் அளவிற்கு பட்ஜெட் விலையில் விமான சேவையை தரவுள்ளது ஒரு நிறுவனம்.

ஜேஜூ தீவுகள்

நம்மில் பலருக்கு இந்த ஜேஜூ தீவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தென்கொரியா நாட்டில் அமைத்துள்ள ஒரு அருமையான தீவு தான் இந்த ஜேஜூ தீவுகள். K Pop ரசிகர்கள் நீங்கள் என்றால், ஜேஜூ தீவுகள் உங்களுக்கு அதிசிறந்த அனுபவத்தை தரக்குடியாக ஒரு இடமாக இருக்கும். கிளாஸ் அரண்மனை, டெடி பீர் அருங்காட்சியகம் என்று கண்டு மகிழ பல இடங்கள் இங்கு உண்டு.

மேலும் இந்த தீவை சுற்றியுள்ள கடற்பரப்பு தான் லட்சக்கணக்கான மக்களை ஆண்டுதோறும் இங்கு ஈர்த்து வருகின்றது. நமது சிங்கப்பூரில் இருந்தும் கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு சென்று தங்கள் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

Scoot சேவை

மேலும் சிங்கப்பூரில் இருந்து நேரடியாக ஜேஜூ தீவுகளுக்கு செல்ல இதுவரை Scoot மட்டுமே விமான சேவையை அளித்து வந்தது. ஆனால் இந்த சூழலில் அந்த நிறுவனத்திற்கு போட்டியாக, கொரியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு Low Cost ஏர்லைன்ஸ் இப்போது களமிறங்குகிறது.

T’Way Air

கொரியாவை அடிப்படையாக கொண்ட இந்த விமான சேவை நிறுவனம், இப்போது சிங்கப்பூரில் இருந்து ஜேஜூ தீவுக்கு நேரடி விமானங்களை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்க உள்ளது. அதுவும் ரவுண்டு ட்ரிப் சென்று வர 343.30 சிங்கப்பூர் டாலர்களை துவக்க விலையாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த பயணத்திற்கு 15 கிலோ வரை இலவச செக்-இன் லக்கேஜ் அளிக்கப்படுகிறது இதன் கூடுதல் சிறப்பு.

சிங்கப்பூரில் குறையும் கோவிட் 19 தொற்று – அமைச்சகம் தந்த குட் நியூஸ்!

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தான் T’Way Air தனது சேவைகளை சிங்கப்பூரில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜேஜூ தீவுகளுக்கு தனது சேவையை துவங்கவுள்ள இந்த நிறுவனம், செப்டம்பர் வாக்கில் தினசரி சேவையை துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts