சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) துவாஸ் எரிப்பு ஆலையில் உள்ள மின் சுவிட்ச் அறையில் நடந்த வெடிப்பு காரணமாக ஒருவர் இறந்துள்ளார். மற்றும் இரண்டு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டமாக இருந்த மின் சுவிட்ச் அறையைக் கண்டறிந்து சுவாசக் கருவியை அணிந்து அவர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது சுவிட்ச் அறையில் புகைபோக்கி மின்விசிறியில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் இரண்டு உலர் தூள் தீயை அணைக்கும் கருவிகள் மூலம் “ஒரு சில பகுதிகளில்” பரவிய அணைத்தனர் என்று SCDF தெரிவித்துள்ளது.
மின்சக்தி சுவிட்ச் அறையில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த ஆலையை இயக்கும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக SCDF மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. மேலும் 59 மற்றும் 64 வயது உள்ள தீக்காயமடைந்த இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். “புகை உள்ளிழுத்தல் அல்லது கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆனால் நிலையான நிலையில் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பதிலாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சிறப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள்” என்று SCDF தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
மூன்று தொழிலாளர்களும் சிங்கப்பூரர்கள் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் SCDF கூறுகையில், தீவிபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், சுமார் 80 பேர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்தது.