சில நாட்களுக்கு முன்பு “TTF” என்ற வார்த்தையை நீங்கள் அதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. காரணம், TTF வாசன் எனும் இளைஞர் தான். ஆங்! இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும். பல இணையவாசிகளை ரசிகர்களாக வைத்திருக்கும் யூடியூபர் தான் TTF வாசன்.
இவர் Twin Throttler என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இவர் ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில், லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர். நண்பர்களுடன் பைக் ரைடு சென்று, அதனை யூடியூபில் பதிவு செய்வது தான் இவரது வாடிக்கை.
அதே சமயம், பைக் வீலிங் செய்து தனது சாகசத்தை காட்டி வீடியோக்களும் பதிவிடுவார். காலை விரித்துக் கொண்டு லெட்டர் படித்தே பிரபலமான மற்றொரு யூடியூபர் ஜி.பி.முத்துவை சமீபத்தில் பைக்கில் ஏற்றிக் கொண்டு, புயல் வேகத்தில் இவர் பைக் ஓட்டி சாகசம் செய்ய, வாசன் மீது வழக்கு பாய்ந்தது. அந்த அளவுக்கு ஏகப்பட்ட பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாதவர் தான் TTF வாசன்.
இன்று (அக்.27) மாலை TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு “6 கோடி” – லாட்டரி வாங்கிட்டீங்களா?
இவரது நண்பர் TTF அஜீஸ். இவரும், வாசனுடன் பைக்கில் பயணம் மேற்கொண்டு அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அஜீஸ் இப்போது ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது “SAVE NATURE” என்ற பிரச்சாரத்தை வலியுறுத்தி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு லிஃப்ட் கேட்டே செல்லப் போவதாக கிளம்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இயற்கை நமக்கு ரொம்ப முக்கியம். சென்னையில் இருந்து ஏன் சிங்கப்பூருக்கு நடந்தே போறோம்-னா, அப்படி போகும் போது, வெயில்ல நின்னு நாம லிஃப்ட் கேட்க வேண்டியிருக்கும். அப்போ, ஒரு நிழல் தர ஒரு மரம் கூட இல்லாம போகும் போது தான், நமக்கு அதோடு மதிப்பு தெரியும். இது மக்களாகிய உங்களுக்கும் தெரியணும்-னு தான், நாங்க லிஃப்ட் கேட்டு போயிட்டு இருக்கோம்” என்று சொல்லியிருக்கிறார்.
கூட ஒரு கேமரா உதவிக்கு ஒரு நண்பரை அழைத்துச் சென்றுள்ள அஜீஸ், இன்று (அக்.27) தான் ஆந்திராவை அடைந்துள்ளார். இவருடைய பயணம், ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. இன்னும் என்னென்ன தடைகளை கடந்து, ஒவ்வொருவரிடமும் லிஃப்ட் கேட்டு சிங்கப்பூர் வருகிறார் என்று பார்க்கலாம்.