சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே அண்மையில் அமைக்கப்பட்ட Travel Bubble மூலம் மீண்டும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே \விமான சேவையை அளித்துவருகின்றது Scoot நிறுவனம். இதற்கான அறிவிப்பை தனது முகநூல் பகுதியில் அந்நிறுவனம் வெளியிட்டது. கடந்த 30 நவம்பர் முதல் இந்த சேவையை அந்த நிறுவனம் அளித்து வருகின்றது. குறிப்பாக திருச்சி, ஹைதெராபாத் மற்றும் அம்ரிஸ்டர் ஆகிய நகரங்களில் இருந்து சேவைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தொற்று பரவத்தொடங்கிய ஆரம்ப நிலையில் இருந்தே சிங்கப்பூருக்கு தமிழகத்தின் திருச்சியில் இருந்து பல விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கப்பூரின் VTL சேவை துவங்குவதற்கு முன்பே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல விமானங்கள் சிங்கப்பூர் மற்றும் திருச்சி ஆகிய இருமார்கங்களில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அளவில் திருச்சியில் இருந்து தான் அதிக அளவில் விமானங்கள் சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் “இந்திய பெண்ணுக்கு” சிறை
இதுவரை சுமார் 400 விமானங்கள் சிங்கப்பூருக்கு திருச்சியில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதலாக கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் RT-PCR சோதனைக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் தொற்று சோதனைகளுக்கு 1 மணிநேரத்திற்குள் ரிசல்ட் வந்துவிடுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனைக்கு ரூபாய் 1370 வசூலிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு, குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு செல்ல மைய இடமாகவே திருச்சி விமானநிலையம் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.