TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம்.. திருச்சி ஏர்போர்ட்டில் மறுக்கப்பட்ட அனுமதி.. கடைசி நொடியில் திசைமாறிய பயணம் – 150 பயணிகளின் திக் திக் அனுபவம்

SINGAPORE: தமிழகத்தின் மிகப்பெரிய விமான நிலையங்களில் திருச்சி ஏர்போர்ட் மிக முக்கியமானது. இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளின் மிக முக்கிய ‘HUB’ என்றால் அது திருச்சி ஏர்போர்ட் தான். அதேபோல் திருச்சி – சிங்கப்பூர் இடையே தினம் இரு மார்க்கமாக தினம் பல பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.4) சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. மாலை 6.30 மணி அளவில் திருச்சியை நெருங்கிய போது, திருச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது.

விமானத்தின் பைலட், திருச்சியில் லேண்ட் செய்வதற்கான அனுமதியை கோரினார். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். அந்தளவுக்கு கடுமையாக மழை பெய்தது. ரன்வேயில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்திருக்கும் அளவுக்கு மழையின் தீவிரம் இருந்தது.

பொதுவாக இதுபோன்ற ‘Yes or No’ விஷயங்களில், பெரும்பாலும் அதிகாரிகள் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள். அவ்வளவு சீக்கிரம் அனுமதி கொடுக்கமாட்டார்கள். ஏனெனில், மழை பெய்த போது, விமானங்களை லேண்ட் செய்து அதனால் பல விபத்துகள் இதற்கு முன் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க – வெளிநாட்டில் வேலைப் பார்த்தாலும்.. காதல் விஷயத்தில் தீயாய் செயல்பட்ட இளைஞர் – 8000 கி.மீ கடந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து தாலிக் கட்டிய “வைராக்கியம்” – வெட்கத்தில் சிவந்த நைஜீரிய பெண்

அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட, அது திருச்சியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் 5 நிமிடங்களில் திருச்சி ஏர்போர்ட்டை தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும், எதுவும் செய்ய முடியவில்லை.

இறுதியில், அந்த விமானம் சென்னைக்கு மாற்றிவிடப்பட்டது. இதனால் அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். தொட்டுவிடும் தூரத்தில் திருச்சி இருந்தும், 150 பயணிகளுடன் அந்த விமானம் வேறு வழியின்றி சென்னை பறந்தது. மழை குறைந்த பிறகு, சென்னையில் இருந்து மீண்டும் திருச்சி செல்லும் என விமானிகள் அறிவிக்க, விமானத்தில் பயணித்த 150 பயணிகளும் ஒரு மிக மோசமான அனுபவத்தை அன்று எதிர்கொண்டனர்.

இதில், அதிக நேரம் விரயமானாலும், பயணிகள் அதனை பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில், ரிஸ்க் எடுத்து விமானத்தை லேண்ட் செய்ய நினைத்து, அதனால் ஒரு விபத்து ஏற்பட்டு வாழ்க்கையை இழப்பதை விட, சில மணி நேரங்களை இழப்பது எவ்வளவோ மேல்!.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts