TamilSaaga

சிங்கப்பூரில் மொத்தம் 128 தொற்று குழுமங்கள் – தொடர்ந்து முதலிடத்தில் ஜூரோங் துறைமுகம்

சிங்கப்பூரில் நேற்று ஆகஸ்ட் 7ம் தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் செயல்பாட்டில் உள்ள பெருந்தொற்று கிளஸ்டர்களின் பட்டியலில் இரண்டு புதிய பெருந்தொற்று கிளஸ்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கிளஸ்டர்களில் ஒன்று சின் மிங் 23 காபி ஷாப் ஆகும், இது பிளாக் 23, சின் மிங் சாலையில் அமைந்துள்ளது, இதில் ஐந்து வழக்குகள் தற்போது உள்ளன.

தற்போது சிங்கப்பூரில் மொத்தம் 128 பெருந்தொற்று குழுமங்கள் நடப்பில் உள்ளது என்று சிங்கப்பூர் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கே.டிவி குழுமம் தான மிகப்பெரிய தொற்று குழுமமாக கருதப்பட்ட நிலையில் தற்போது மிகப்பெரிய தொற்று குழுமமாக உருவெடுத்துள்ளது ஜூரோங் துறைமுக தொற்று குழுமம்.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) நண்பகல் 12 மணி நிலவரப்படி 81 புதிய பெருந்தொற்றுகளை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதி செய்தது. இது சிங்கப்பூரில் பதிவான மொத்த பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 65,686 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் சிங்கப்பூரில் நேற்று 80 வயது மூதாட்டி ஒருவர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

நேற்று பதிவான 81 புதிய வழக்குகளில் 75 புதிய உள்ளூர் வழக்குகள் வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகளில், 50 முந்தைய வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts