சிங்கப்பூர் : சிங்கப்பூரில் இருந்த படியே உங்களின் Passport-யை Renewal செய்வதற்கு ஒரே வழி தான் உள்ளது. அது ஆன்லைன் மூலமாக மட்டுமே செய்வது தான். தேவையான ஆவணங்களை சமர்பித்து உங்களின் Passport-யை Renewal செய்து கொள்ளலாம்.
Passport Renewal செய்ய தேவையானவை :
- பழைய Passport ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர், பெற்றோர் மற்றும் மனைவியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் Passport Renewal செய்வதற்கு விண்ணப்பிக்கும் போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.
- ஒருவேளை அதில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் அதற்குரிய ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- https://www.blsinternational.com/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
- 51mm * 51mm என்ற அளவில் தெளிவான போட்டோவை இணைத்திருக்க வேண்டும். இந்த போட்டோ 3 மாதங்களுக்குள் எடுத்ததாக இருக்க வேண்டும். வெள்ளை பேக்கிரவுண்டில், dark color dress அணிந்து எடுத்ததாக இருக்க வேண்டும். தலை நேராக, கண்கள் திறந்த படி, காதுகள், நெற்றி, தாடை ஆகியவை தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும். போட்டோவில் உங்களின் முகம் அல்லது கழுத்தில் எந்த நிழலும் படியாமல் இருக்க வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் பெயரில் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதற்கான இந்திய ஆவணங்கள் அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வெளியிடப்பட்ட இந்திய மற்றும் சிங்கப்பூர் செய்தி தாள் போட்டோ இணைக்க வேண்டும். அதில் பழைய பாஸ்போர்ட் எண்ணில் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட பெயர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- ஏதாவது ஒரு செல்லத்தக்க விசா குறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- பாஸ்போர்ட் புதுக்கப்படும் நபர் 5 அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் கண்டிப்பாக விண்ணப்பம் அளிக்கும் போது நேரில் வர வேண்டும்.
- ஒருவேளை பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஓராண்டுக்கும் அதிகமான காலம் இருக்கும் போது அதை புதுப்பிப்பதாக இருந்தால் எதற்காக முன்கூட்டியே புதுப்பிக்கிறீர்கள் என்ற காரணத்தை வேலை செய்யும் நிறுவனம் அளித்த கடித்துடன் குறிப்பிட வேண்டும்.
- EP, Spass, work permit DP உள்ளிட்ட ஏதாவது ஒரு சிங்கப்பூர் அடையாள சான்றை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை அவர் PR ஆக இருந்தால் அதற்கான கார்டு, மீண்டும் திரும்பி வந்ததற்கான அனுமதி கார்டு ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.
- பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விண்ணப்பதாரர் 21 வயதிற்கு கீழ் இருந்தால் அவர்களின் பெற்றோர்களின் பாஸ்போர்ட் மற்றும் சிங்கப்பூர் அடையாள சான்றுகள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
- பெற்றோர்களில் யாராவது ஒருவர் வெளிநாட்டினராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களையும், அவரின் ஒரிஜினல் பாஸ்போர்டையும் விண்ணப்பம் அளிக்கும் போது காண்பிக்க வேண்டும்.